கேரள வெள்ள நிவாரணத்துக்கு மாருதி சுசூக்கி ஊழியர்கள் 1.82 கோடி ரூபாய் நிதி

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை உடைய தங்கள் வாடிக்கையாளர்கள் பயணம் செய்ய, உதவும் வகையில் டாக்ஸி அல்லது மாற்று கார்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

View Photos

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உதவும் வகையில் மாருதி சுசூக்கி நிறுவன ஊழியர்கள் இணைந்து 1.82 கோடி ரூபாய் நிதியளித்துள்ளனர். இந்த நிதியை அந்நிறுவனத்தின் மூத்த இயக்குனர் கல்சி, கேரள மாநில கன ரக தொழில் துறை அமைச்சர் ஜெயராஜனிடம் கொடுத்தார்.

இதற்கு முன், மாருது சுசூக்கி நிறுவனம் சார்பாக பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சிறப்பு சேவை வழங்கியும் வருகிறது. வெள்ளத்தில் மூழ்கிய கார்களை சரி செய்ய 24 மணி நேர சேவையை, 180 டீலர் வொர்க் ஷாப்பில் செய்து வருகிறது. இதற்கென தனி கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது.

கார்

0 Comments

மேலும், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை உடைய தங்கள் வாடிக்கையாளர்கள் பயணம் செய்ய, உதவும் வகையில் டாக்ஸி அல்லது மாற்று கார்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. அவசரகால கால் சென்டர் சேவைகளும், பதிக்கப்பட்ட கார்களை எடுத்து வர டோயிங் வேன் சேவையும் டீலர் வொர்க் ஷாப்பில் கொடுக்கப்படுகிறது. கார்கள் சரி செய்யப்பட்ட பிறகு ஒரு மாதத்துக்கு பின் மற்றொரு சர்வீஸுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறது அந்நிறுவனம்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Maruti Suzuki S-Presso with Immediate Rivals

Be the first one to comment
Thanks for the comments.