50 எல்க்ட்ரிக் கார்களின் சோதனையை தொடங்க இருக்கிறது மாருதி சுசூக்கி

எல்க்ட்ரிக் கார் தயரிப்பு மற்றும் சோதனை, டொயோட்டா நிறுவனத்தின் உதவியோடு நடைபெற இருக்கிறது.

View Photos

மாருதி சுசூக்கி நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கி, 50 எலக்ட்ரிக் கார்களை சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு முதல் எல்க்ட்ரிக் கார் விற்பனையை தொடங்க இருப்பதாகவும் சுசூக்கி நிறுவனத்தின் சேர்மேன் ஒசாமு சுசூக்கி தெரிவித்துள்ளார். முன்னதாக, பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படும் என்றும், 2020-ம் ஆண்டுக்குள் அங்கு லித்தியம் பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

mfbmps78

எல்க்ட்ரிக் கார் தயரிப்பு மற்றும் சோதனை, டொயோட்டா நிறுவனத்தின் உதவியோடு நடைபெற இருக்கிறது. பாதுகாப்பு, பருவ நிலை, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி இந்திய வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஒசாமு தெரிவித்தார்.

hia7a2ao

மாருதி சுசூக்கி வேகன் -ஆர் காரை தான் எல்க்ட்ரிக் கார் பிளாட்ஃபார்ம் ஆக பயன்படுத்த இருக்கிறது அந்நிறுவனம். முதலில் வெளியாகும் எலக்ட்ரிக் காரும் அந்த மாடலில் தான் இருக்கிறது என்று தெரிகிறது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.