New Cars and Bikes in India

எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ததா மஹிந்திரா XUV300 ?

குறைந்தபட்சமாக W4 பெட்ரோல் வகை காரின் விலை ரூ.7.90 இலட்சமாக உள்ளது

View Photos
இந்த கார் நான்கு மாடல்களில் வருகிறது

Highlights

  • The Mahindra XUV300 takes on Vitara Brezza, EcoSport & Nexon
  • It gets a 1.2 petrol and a 1.5 diesel engine with 6-speed transmission
  • There are a bunch of segment first features on the Mahindra XUV300

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. W4, W6, W8, W8(O) என மூன்று வகைகளில் இந்த கார் வருகிறது. குறைந்தபட்சமாக W4 பெட்ரோல் வகை காரின் விலை ரூ. 7.90 இலட்சமாக உள்ளது. அதிகபட்சமாக W8(O) டீசல் வகை காரின் விலை ரூ. 11.99 இலட்சமாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.  

W4 வகை XUV300 காரானது, இரண்டு ஏர் பேக், EBD உடன் ABS, எலக்ட்ரிக் ORVM மற்றும் கியர்ஷிப்ட் இண்டிகேட்டர் உடன் வருகிறது. மேலும் 16 இன்ச் ஸ்டீல் சக்கரங்கள், 4 இன்ச் ஸ்பிக்கர்கள், 3,5 இன்ச் ஆடியோ சிஸ்டம் என பல அம்சங்களுடன் வருகிறது.

2019 Mahindra XUV300

(Mahindra XUV300: The cabin on the XUV300 has a two-tone upholstery along with a minimalist design)

W4 வகை XUV300 காரில் இருக்கும் அனைத்து அம்சங்களும் W6 வகை XUV300 காரில் இருக்கிறது. கூடுதலாக இந்த காரில் கிரீலில் சில்வர் நிறம் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்டிரிங் மவுண்ட் கண்ட்ரோல்(Steering mount control), டோர் கிலாடிங்(Door cladding), கீ இல்லாத எண்ட்ரி(Keyless entry) அம்சங்கள் இந்த W6 வகை காரின் சிறப்புகள். மேலும் இந்த காரில் கருப்பு நிற ரூப் உள்ளது.

2019 Mahindra XUV300

(Mahindra XUV300: We drove the 1.5 diesel variant of the XUV300. The engine pumps out a swell of torque in the bottom and mid range )

W6 வகை XUV300 காரின் அம்சங்கள் W8 வகை XUV300 காரில் உள்ளது. ஆட்டோமேட்டிக் ப்ரோஜக்டர் ஹெட்லாம்ப், 17 இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த W8 வகை XUV300 காரில் உள்ளது. வானிலைக்கு ஏற்றது போல் மாறும் கண்ட்ரோல் இந்த காரில் உள்ளது.

2019 Mahindra XUV300

(Mahindra XUV300: We quite like the character lines on the profile of the XUV300)

0 Comments

இது சந்தையில் மாருதி சூசுகி விட்டாரா பிரிஸா, டாடா நேக்ஸான் மற்றும் ஃபோர்ட் எக்கோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக இருக்கும். 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.