மகேந்திரா நிறுவனம் தயாரிப்பை நிறுத்துகிறதா? முழு விவரங்கள் உள்ளே...!

2019 மே மாதத்தில் 45,421 வாகனங்களையும் 2018 மே மாதத்தில் 46,848 வாகனங்களையும் மகேந்திரா நிறுவனம் விற்றது

View Photos
மே மாதத்தில் மூன்று சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்தது மகேந்திரா

Highlights

  • ஏப்ரல் மாதத்தில் மட்டும் பாசஞ்சர் வாகனங்கள் 17.07 சதவிகிதம் வீழ்ச்சி
  • ஏப்ரல் 2019 யில் மொத்தம் 43,721 வாகனங்களை விற்பனை செய்தது மகேந்திரா
  • ஏப்ரல் 2018 விற்பனையை ஒப்பிடும் போது 9 சதவிகிதம் குறைவாகும்

வாகன நிறுவனங்களுக்கு இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு சோதனை காலமாகும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் பாசஞ்சர் வாகனங்கள் 17.07 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டது.

மகேந்திரா நிறுவனம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தால் 13 நாட்கள் தங்களது தயாரிப்பு பிளாண்ட்களை மூடுவதாக அறிவித்துள்ளது. மகேந்திர நிறுவனத்தின் வாகனங்களின் தேவைகள் குறைவாக இருப்பதால் தான் இந்த முடிவு என தெரிகிறது.

பம்பாய் பங்கு வர்த்தகத்தில், ‘தயாரிப்பை விற்பனையுடன் ஒப்பிட்ட பின் பல மகேந்திரா தயாரிப்பு பிளாண்ட்களில் 5-13 நாட்களுக்கு தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது எம்விஎம்எல் க்கும் சாரும்' என மகேந்திரா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

ஏப்ரல் 2019 யில் மொத்தம் 43,721 வாகனங்களை விற்பனை செய்தது மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனம். ஏப்ரல் 2018 விற்பனையை ஒப்பிடும் போது 9 சதவிகிதம் குறைவாகும். ஏப்ரல் 2018 யில் 48,097 வாகனங்களை மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனம் விற்றது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் வாகனங்களில் ஏப்ரல் 2019 யில் 17,321 வாகனங்களையும் ஏப்ரல் 2018 யில் 18,963 வாகனங்களையும் மகேந்திரா நிறுவனம் விற்றது குறிப்பிடத்தக்கது.

2019 மே மாதத்தில் 45,421 வாகனங்களையும் 2018 மே மாதத்தில் 46,848 வாகனங்களையும் மகேந்திரா நிறுவனம் விற்றது. மே 2019 யின் விற்பனை 3 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

0 Comments

மகேந்திரா நிறுவனத்தின் மரஷோ மற்றும் XUV300 கார்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த இரு கார்களின் ஆட்டோமெடிக் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது மகேந்திரா.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.