வந்து விட்டது எட்டு இருக்கை கொண்ட மஹிந்திரா மராஸ்ஸோ.. விலை என்ன தெரியுமா?

இப்பொழுது M8 மரஷோவின் விலை 13.98 இலட்சமாகும்.

View Photos
பாதுகாப்பு அம்சங்களில் இது 4 ஸ்டார் பெற்றுள்ளது

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா கார் நிறுவனத்தின் காரான மராஸ்ஸோ இப்பொழுது எட்டு இருக்கையுடன் கிடைக்கிறது. இதுவரை M8 வகையான மராஸ்ஸோ, கார் ஏழு இருக்கையுடனே வந்தது.

M8 ஏழு இருக்கை கொண்ட காரை விட, M8 எட்டு இருக்கை கார் 8000 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது M8 மராஸ்ஸோவின் விலையானது ரூ.13.98 இலட்சமாகும்.

 

8g3062fg

இப்பொழுது எட்டு இருக்கைகள் இதில் கிடைக்கிறது

டெக்னிக்கலாக, 7 இன்ச் தொடு திரை, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆட்டோ ப்ளே, 17 இன்ச் அலாய் வீல், லெதர் சீட்கள் என பல அம்சங்கள் உள்ளன.

இது குறித்து மஹிந்திரா மற்றும் மஹிந்திராவின் விஜாய் நக்ரா கூறுகையில், ‘உலக தரத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கார் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 8 இருக்கைகள் அறிமுகம் செய்வதன் மூலம், இந்த காரின் வரவேற்பு மேலும் அதிகரிக்கும் என்று எண்ணுகிறோம்' என்றார்.

 

1bujmqhc

இதன் இன்ஜினியரிங், அமெரிக்காவிலும் சென்னையிலும் சேர்ந்து செய்யப்பட்டது. மஹிந்திரா டிசைன் ஸ்டுடியோவும் இத்தாலியின் பின் இன்பார்னியாவும் சேர்ந்து இதனை வடிவமைத்தது. மராஸ்ஸோ கார், பாதுகாப்பில் 4 ஸ்டார்கள் பெற்றுள்ளது. க்ளோபல் NCAP யில் 4 ஸ்டார்கள் பெறும் முதல் இந்தியாவில் தயாரான கார் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

8iq0901o

இத்தாலி மற்றும் இந்தியாவில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டுள்ளது

0 Comments

1.5 லிட்டர் மானுவல் வசதியுடன் இந்த கார் தற்போது கிடைக்கிறது. விரைவில் ஆட்டோ வசதியுடனும் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.