'சோ சேட்...!'- மகேந்திரா நிறுவனத்தின் இந்த காரின் தயாரிப்பு முடிவிற்கு வருகிறது

தற்போதுள்ள KUV100 டீசல் காரில் 1.2 லிட்டர் எம்ஃபெல்கான் டி75 டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது

View Photos

Highlights

  • 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது இந்த கார்
  • பெட்ரோல் கார் தொடர்ந்து விற்பனைக்கு வரும்
  • அனைத்து வாகனங்களும் BS6 கட்டுபாடுகளுக்கு மாற வேண்டும்

இந்தியாவில் விரைவில் BS6 கட்டுபாடுகள் அமலுக்கு வரவுள்ளது. இதனால் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை BS6 கட்டுபாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றி வருகின்றன.

இந்நிலையில் மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனமானது KUV100 காரின் டீசல் வகையானது BS6 கட்டுபாடுகளுக்கு மாற்றபடாது எனவும் அதன் தயாரிப்புகளை நிறுத்த போவதாகவும் கூறியுள்ளது. KUV100 காரின் பெட்ரோல் வகை கார் BS6 கட்டுபாடுகளுக்கு மாற்றப்பட்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

r1rldh8

இந்த ஆண்டின் இறுதியில் eKUV100 அறிமுகம் செய்யப்படவுள்ளது

தற்போதுள்ள KUV100 டீசல் காரில் 1.2 லிட்டர் எம்ஃபெல்கான் டி75 டர்போசார்ஜ் டீசல் இன்ஜின் பெற்றுள்ளது. அது 77 BHP பவரையும் 190 Nm உட்ச டார்க்கையும் தருகிறது.

முன்பு டீசல் விலை குறைவாக இருந்ததால் டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் பெட்ரோல் கார்கள் அதிக அளவில் விற்பனை ஆகிறது.

mahindra kuv100 nxtடீசல் வகை KUV100 முடிவிற்கு வருகிறது
0 Comments

KUV100 டீசல் கார்கள் என்று வரை விற்பனையில் இருக்கும் என தெரியவில்லை. ஏப்ரல் 2020 க்குள் அனைத்து கார்களும் BS6 கட்டுபாடுகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதால் மகேந்திரா மற்றும் மகேந்திரா நிறுவனம், தங்களது கார்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் BS6 கட்டுபாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றவுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.