கேரள வெள்ளத்தின் போது ஓடியோடி உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு..!

கேரள வெள்ளத்தின் போது, அம்மாநில மீனவர்கள் செய்த உதவிகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது

அமைச்சரிடமிருந்து பரிசை வாங்கும் ஜெய்சல்

கேரள வெள்ளத்தின் போது, அம்மாநில மீனவர்கள் செய்த உதவிகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக வீட்டின் மாடிகளிலும் மரங்களின் கிளைகளிலும் பல நாட்கள் சிக்கித் தவித்த மக்களை மீட்புப் படையினருடன் இணைந்து மீனவர்கள் தான் காப்பாற்றினர். இதில் கவனம் ஈர்த்த ஒரு மீனவர் தான் ஜெய்சல்.  மீட்புப் படகில் மக்கள் ஏற, முட்டிப் போட்டு தன் முதுகை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த ஜெய்சலின் பெருந்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த மேன்மையான நடவடிக்கையைப் பாராட்டும் விதத்தில் மஹிந்திரா வாகனம் தயாரிப்பு நிறுவனம், தனது புதிய இறக்குமதியான ‘மராஸோ’ எஸ்.யூ.வி காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளது. கோழிக்கோட்டில் இருக்கும் மஹிந்திரா ஷோ-ரூம் ஒன்றில் கேரள தொழிலாளர் துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஜெய்சலுக்கு ‘மராஸோ’ வழங்கப்பட்டது. மஹிந்திரா நிறுவனம், இதற்கு முன்னரும் இதைப் போன்ற சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு வாகனத்தைப் பரிசாக கொடுக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News
அசத்தலான டுகாட்டி ஸ்க்ராம்ளர் - முழு விவரம்
2.4 லட்சம் கார்களில் கோளாறு..!?- நிசான் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
2018 மெர்சிடிஸ் பென்ஸ் - C-Class Facelift இந்தியாவில் அறிமுகம் - ஆரம்ப விலை ரூ. 40 லட்சம்
ஃபெராரியின் புதிய கார் “புரோசங்’’ 2022-ல் அறிமுகம்
2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வரும் அதிரடி ஆடி கார்!
அட்டகாசமான மெர்சிடீஸ் - AMG G63 அடுத்தமாதம் இந்தியாவில் அறிமுகம்
மகாராஷ்டிராவில் ரூ. 91-ஐ தாண்டியது பெட்ரோல் விலை
பி.எம். டபிள்யூ. கார்களின் ஏ.சி.-யில் கோளாறு
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அந்த ஃபெர்ராரி வாகனத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு!
அட்டகாசமான ஜீப் காம்பஸ் ப்ளாக் பேக் இந்தியாவில் அறிமுகம்
டாடா டீயாகோ சாதனை – 28 மாதங்களில் 1.7 லட்சம் கார்கள் விற்பனை