கேரள வெள்ளத்தின் போது ஓடியோடி உதவி செய்த மீனவருக்கு கார் பரிசு..!

கேரள வெள்ளத்தின் போது, அம்மாநில மீனவர்கள் செய்த உதவிகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது

View Photos
அமைச்சரிடமிருந்து பரிசை வாங்கும் ஜெய்சல்

கேரள வெள்ளத்தின் போது, அம்மாநில மீனவர்கள் செய்த உதவிகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக வீட்டின் மாடிகளிலும் மரங்களின் கிளைகளிலும் பல நாட்கள் சிக்கித் தவித்த மக்களை மீட்புப் படையினருடன் இணைந்து மீனவர்கள் தான் காப்பாற்றினர். இதில் கவனம் ஈர்த்த ஒரு மீனவர் தான் ஜெய்சல். 

மீட்புப் படகில் மக்கள் ஏற, முட்டிப் போட்டு தன் முதுகை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த ஜெய்சலின் பெருந்தன்மை குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த மேன்மையான நடவடிக்கையைப் பாராட்டும் விதத்தில் மஹிந்திரா வாகனம் தயாரிப்பு நிறுவனம், தனது புதிய இறக்குமதியான ‘மராஸோ’ எஸ்.யூ.வி காரை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளது.

கோழிக்கோட்டில் இருக்கும் மஹிந்திரா ஷோ-ரூம் ஒன்றில் கேரள தொழிலாளர் துறை அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஜெய்சலுக்கு ‘மராஸோ’ வழங்கப்பட்டது.

0 Comments

மஹிந்திரா நிறுவனம், இதற்கு முன்னரும் இதைப் போன்ற சமூக செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு வாகனத்தைப் பரிசாக கொடுக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.