6 லட்சம் ரூபாய் விலை குறைப்போடு விற்பனைக்கு வந்தது கவாசாக்கி நின்ஜா ZX-10R

ZX-10R பைக்கின் விலை 12.80 லட்சம் ரூபாய். ZX-10RR பைக்கின் விலை 16.10 லட்சம் ரூபாய்

View Photos

இந்தியா கவாசாக்கி நின்ஜா நிறுவனம், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட ZX-10R மற்றும் ZX-10RR சூப்பர் பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ZX-10R பைக்கின் விலை 12.80 லட்சம் ரூபாய். ZX-10RR பைக்கின் விலை 16.10 லட்சம் ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம்).

2018 kawasaki ninja zx 10r

இதற்கு முன் இந்த இரண்டு பைக்குகளும், அசெம்பிளான பின் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது. அப்போது அவற்றின் விலை ZX-10R 18.8 லட்சம் ரூபாயாகவும், ZX-10RR பைக்கின் விலை 21.9 லட்சம் ரூபாயாகவும் இருந்தது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் 6 லட்சம் வரை விலைக் குறைந்துள்ளது.

சூப்பர் பைக்கின் வரிசையில் 12.80 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் ஒரே பைக் ZX-10R மட்டுமே.

2018 kawasaki ninja zx 10rr

இந்தியாவில் கவாசாக்கி டீம் ரேஸிங்கின் பச்சை நிறத்தில் மட்டுமே ZX-10R விற்பனைக்கு கிடைக்கும். ZX-10RR பைக்கில் கருப்பு மேட் ஃபினிஷ் நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ZX-10R பைக்கில், 5 மோட்களில் ஸ்போர்ட்ஸ் டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், லான்ச் கன்ட்ரோல் மற்றும் என்ஜின் பிரேகிங் அம்சங்கள் உள்ளன. 998 சி.சி, லிக்விட் கூல், 4 ஸ்ட்ரோக், 4 சிலிண்டர் என்ஜின் கொண்டது. 197 ஹார்ஸ் பவரும், 113.5 டார்க்கும் அடையக் கூடிய திறன் கொண்டது இந்த என்ஜின். ZX-10RR இதே என்ஜினை தான் பெற்றிருக்கிறது. ஆனால், வீல் மட்டும் மாரெசெனி ஃபோர்ஜ்ட் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குமே 206 கிலோ கெர்ப் எடை கொண்டது.

0 Comments

2018 kawasaki ninja zx 10rr

விற்பனை தொடக்கத்துக்கான சிறப்பு சலுகையாக இந்த சூப்பர் பைக்குகள் மேலே குறிப்பிட்ட விலைக்கு விற்க்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் விலை அதிகரிக்கப்படலாம். இந்தியாவில் உள்ள அனைத்து கவாசாக்கி டீலர்களிடமும் இந்த பைக்கை வாங்க புக்கிங் தொடங்கியது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.