New Cars and Bikes in India

லெக்சஸ் நிறுவனத்தின் ES300h சொகுசு கார் இந்தியாவில் அறிமுகமானது

இந்த ஹைபிரிட் காரின் மைலேஜ் லிட்டருக்கு 22.7 கிமீ தருகிறது.

View Photos
லெக்சஸ் நிறுவனம் தனது ஹைபிரிட் செடானை சில வாரங்ககளுக்கு முன் அறிமுகப்படுத்தியது

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ், ES300h செடான் காரை சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் சாஃப்ட் லான்ச் செய்தது. இப்போது அதிகாரப் பூர்வமாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. பெரிய அளவு LS 500h காரை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ES300h சொகுசு செடான், சில மாதங்களுக்கு முன் தான் சர்வதேச அளவில் அறிமுகமானது. மிக விரைவாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 59.13 லட்சம் ரூபாய் ( எக்ஸ் ஷோ ரூம் விலை).

9h932a08

2019 லெக்சஸ் ES300h சொகுசு கார்

ES300h செடான் முந்தைய மாடல்கள் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மை விட, பெரிதான பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. 66 எம்.எம் நீளம், 45 எம்.எம் அகலமும், 5 எம்.எம் உயரம் குறைவாகவும் இருக்கிறது. 50எம்.எம் வீல் பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் F-ஸ்போர்ட் மாடலும் முதல் முறையாக விற்பனைக்கு வர இருக்கிறது.

Advertisement

68p7sdko

2019 லெக்சஸ் ES300h சொகுசு கார்

ஹைபிரிட் இன்ஜின் கொண்ட காரான இதில் 2.5 லிட்டர, 4 சிலிண்டர் மோட்டார் உள்ளது. 215 பி.எச்.பி பவர் கொடுக்கும் திறன் கொண்டது. 8 ஸ்பீட் கியர் பாக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் காரின் மைலேஜ் லிட்டருக்கு 22.7 கிமீ தருகிறது.

m67bd9

2019 லெக்சஸ் ES300h சொகுசு கார்

0 Comments

யுரோ 6 விதிகளுக்கு உட்பட்டது இந்த கார். 10 ஏர் பேக்குகளும், டிரவிங் மோடுகளும், பாதுகாப்பு அம்சமாக இருக்கின்றன.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.