2019 லெக்சஸ் இ.எஸ். 300 எச்: சிறப்பம்சங்கள்

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நியூ ஜெனரேஷன் லெக்சஸ் இ.எஸ். 300 எச் செடனின் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்

View Photos
முழு வடிவம் பெற்ற தி 2019 லெக்சஸ் இ.எஸ். 300 எச் கார்.

புதுடெல்லி:

0 Comments

சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் லெக்சஸ் இந்தியா இ.எஸ்.300 எச் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2017-ல் கொண்டுவரப்பட்ட பழைய மாடலுக்கு மாற்றமாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஹைட்ரோ பவர் ட்ரெயின் முறையில் செயல்படும். டொயோடோவின் டி.என்.ஜி.ஏ.வில் இருந்து ப்ரன்ட் வீல் டிரைவ் குளோபல் ஆர்க்கி டெக்சர் – கே அம்சங்கள் புதிய காரில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்...

  1. லெக்சஸ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க் ஸ்பிண்டில் கிரில்லுடன் புதிய மாடலான லெக்சஸ் இ.எஸ். 300 எச் அற்புதமான முகப்புத் தோற்றத்தை கொண்டுள்ளது. சற்று பெரிய எல்.இ.டி. ஹெட்லைட் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பழைய மாடலை விட 18 இன்ச் பெரிய அலாய் வீல்கள் இதில் உள்ளன. மொத்தம் 9 வண்ணங்களில் புதிய மாடல் கார்கள் விற்பனைக்கு வருகின்றன.
  2. பழைய மாடல் காரை விட இதில் இட வசதி அதிகம் உள்ளது. வீல்கள் அனைத்தும் கார்னரை ஒட்டி பொருத்தப்பட்டுள்ளன. லெக் ரூம் பகுதியும் சுமார் ஒரு மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. 454 லிட்டர் அளவுக்கு பூட் பகுதியும் சற்று விரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  3. லெக்சஸ் பியூச்சரில் உள்ள இன்டீரியர் வடிவமைப்பு அடிப்படையில் புதிய மாடலின் கேபின் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரைவர் கேபினில் டச் ஸ்க்ரீன் இன்போடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.
  4. பெட்ரோல் லிட்டருக்கு 22.37 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த கார் செல்லும் என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  5. ஏர்பேக்ஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், விஎஸ்சி உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இ.எஸ். 300 எச்-ல் இடம் பெற்றுள்ளன. இந்திய சந்தையில் இதன் விலை 59.13-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் இ- கிளாஸ், ஆடி ஏ6, பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்.எப். ஆகியவற்றுக்கு போட்டி கொடுக்கும் வகையில் 300எச்-யை அறிமுகப்படுத்தியுள்ளது லெக்சஸ்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.