ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஃபோர்டு அஸ்பையர் அறிமுக தேதி வெளியானது

புதிய பெரிய மத்திய ஏர் டேமும் மாற்றம் செய்யப்பட்ட வட்ட ஃபாக் லேம்பும் உள்ளது. இந்த காரில் புதிய அலாய் வீல்கள் இருப்பதும் அந்த ஸ்பை படங்களில் தெரிய வந்தது

View Photos

2018 ஃபோர்டு அஸ்பைர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த ஆண்டு 

அக்டோபர் 4-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன. சப் காம்பேக்ட் செடான் காரான அஸ்பையரில் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கிடைத்த ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், ஃபோர்டு அஸ்பையர் ஹனிகோம்ப் கிரில்லுடன் குரோம் கவர் கொண்டு வருகிறது. மாற்றி அமைக்கப்பட்ட ஹெட்லாம்புகள், பகலில் எரியும் எல்.இ.டி லைட்டும் இருப்பதாக தெரிகிறது. 

புதிய பெரிய மத்திய ஏர் டேமும் மாற்றம் செய்யப்பட்ட வட்ட ஃபாக் லேம்பும் உள்ளது. இந்த காரில் புதிய அலாய் வீல்கள் இருப்பதும் அந்த ஸ்பை படங்களில் தெரிய வந்தது. 

கேபின் பற்றி கிடைத்த ஸ்பை படங்களில், இன்டீரியர் புதிய ஈக்கோ ஸ்போர்ட் மற்றும் புதிய ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல் கார்களின் இன்டீரியர்களை மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய அஸ்பையரின் இன்டீரியர் அதே கருப்பு மற்றும் பெய்ஜ் டூயல் டோன் நிறத்தில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டு வடிவமைப்பில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. மோனோ க்ரோம் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு பதிலாக டச் ஸ்கிரீன் இன்ஃபோட்யின்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கார் கன்ட்ரோல் பட்டன்கள் குறைந்துள்ளன. டிரைவருக்கு அருகில் இன்ஜின் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.

0 Comments

புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும், தற்போது இருக்கும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளும் இதில் கொடுக்கப்படுகிறது. 5 ஸ்பீட் மேனுவல் கியர் உள்ளது. 6 ஸ்பீட் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் கொடுக்க வாய்ப்புள்ளாதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.