ஜூன் மாதம் டாடா மோட்டர்ஸின் செயல்பாடு எப்படி இருந்தது?

ஏப்ரல் 2018 – ஜூன் 2018 காலத்தை ஒப்பிடும் போது ஏப்ரல் 2019 – ஜூன் 2019 விற்பனையானது 30 சதவிகிதம் குறைவாகும்.

View Photos
வரும் குவாட்டரில் வளர்ச்சி அடையும் என எண்ணியுள்ளது டாடா மோட்டர்ஸ்

Highlights

  • ஏப்ரல் 2019 – ஜூன் 2019 காலத்தில் 36,945 வாகனங்களை விற்றது டாடா.
  • டாடா மோட்டர்ஸ் ஜூன் 2019 யில் 13,351 பாசஞ்சர் வாகனங்களை விற்றது
  • . ஜூன் 2018 யில் 18,213 டாடா மோட்டர்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் விற்பனையானது

ஜூன் மாதமானது வாகன நிறுவனங்களுக்கு மறக்கப்பட வேண்டிய மாதமாகவே அமைந்தது. பல வாகன நிறுவனங்கள் ஜூன் 2019 யில் குறைவான வாகனங்களையே விற்றது.

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தால் ஜூன் 2019 யில் 13,351 பாசஞ்சர் வாகனங்களை மட்டுமே விற்க முடிந்தது. இது, ஜூன் 2018 யை ஒப்பிடும் போது 27 சதவிகிதம் குறைவாகும். ஜூன் 2018 யில் 18,213 டாடா மோட்டர்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2019 – ஜூன் 2019 காலத்தில் 36,945 வாகனங்களை விற்றது டாடா. 52,937 வாகனங்கள் விற்ற ஏப்ரல் 2018 – ஜூன் 2018 காலத்தை ஒப்பிடும் போது ஏப்ரல் 2019 – ஜூன் 2019 விற்பனையானது 30 சதவிகிதம் குறைவாகும்.

kgf8206g இந்தாண்டு டாடா ஆல்ட்ராஸை அறிமுகம் செய்யவுள்ளது டாடா.

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் பாசஞ்சர் வாகனங்கள் பிசினஸ் யூனிட்டின் விற்பனை பிரிவு துணை தலைவர் சிபேந்தர பர்மன் கூறுகையில், ‘கடந்த நான்கு குவாட்டர்களில் ஆட்டோமொபைல் மார்கெட் குறைந்து வருகிறது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் இந்த தூரையும் வீழ்ச்சியடைந்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி முறையும் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இனி வரும் மாதங்களில் ஆட்டோமொபைல் துறை முன்னேறும் என எதிர்பார்க்கிறோம். அதற்காக தயாராகவும் உள்ளோம்' என்றார்.

0 Comments

வரும் குவாட்டரில் வளர்ச்சி அடையும் என எண்ணியுள்ளது டாடா மோட்டர்ஸ். மேலும் இந்தாண்டு டாடா ஆல்ட்ராஸை அறிமுகம் செய்யவுள்ளது டாடா.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.