ஜீப் நிறுவனத்தின் அட்டகாசமான புது எஸ்யூவி கார்!

ஜீப் காம்பஸ் வகையில் புது வகையான ஜீப் காம்பஸ் ஸ்போர்ட்ஸ் பிளஸ் காரை அறிமுகம் செய்துள்ளது ஜீப் நிறுவனம்.

View Photos
டாடா நிறுவனத்தின் ஹாரியர் காருக்கு போட்டியாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Highlights

  • பெட்ரோல் வகை காரின் விலை 15.99 லட்சம் ரூபாயாகும்
  • டீசல் வகை காரின் விலை 16.99 லட்சம் ரூபாயாகும்
  • டீசல் வகையில் 2 லிட்டர் நான்கு சிலிண்டர் மல்டிஜெட் டர்போ மோட்டர் உள்ளது

கார்களின் பிரிவுகளில் முக்கியமானது Compact SUV. இந்த பிரிவில் டாடா நிறுவனம் சமீபத்தில் ஹாரியர் என்ற காரை அறிமுகம் செய்தது. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

Compact SUV பிரிவில் டாடா ஹாரியர் காருக்கு இணையானது ஜீப் காம்பஸ் ஆகும். இந்நிலையில் இந்த ஜீப் காம்பஸ் வகையில் புது வகையான ஜீப் காம்பஸ் ஸ்போர்ட்ஸ் பிளஸ் காரை அறிமுகம் செய்துள்ளது ஜீப் நிறுவனம்.

k6vm9g2gஉட்புறத்தில் ஐந்து இன்ச் தொடுதிரை பெற்றுள்ளது இந்த கார்

ஜீப் Compact ஸ்போர்ட்ஸ் பிளஸ் காரின் பெட்ரோல் வகை காரின் விலை 15.99 லட்சம் ரூபாயாகவும் டீசல் வகை காரின் விலை 16.99 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெக்னிக்கலாக, 16 இன்ச் அலாய் வீல், பின் பக்க பார்க்கிங் சென்சார், சில்வர் மற்றும் கருப்பு நிற ரூப் ரெயில்ஸ் இந்த காரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில் 5 இன்ச் தொடுதிரையுடன் வானிலை கண்ட்ரோலரும் உள்ளது. அது போக இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்சி ஆகியவையும் இந்த காரில் உள்ளன.

c55lh3fஇந்த புது கார் 16 இன்ச் அலாய் வீல் பெற்றுள்ளது
0 Comments

மெக்கானிக்கலாக, டீசல் வகை கார் 2 லிட்டர் நான்கு சிலிண்டர் மல்டிஜெட் டர்போ மோட்டர் பெற்றுள்ளது. இது ஆறு கியர் வசதியுடன் 172 bhp மற்றும் 350 Nm உட்ச டார்க்கைத் தரும். பெட்ரோல் வகை காரானது 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் மல்டிஏர் டர்போ மோட்டர் பெற்று161 bhp மற்றும் 250 Nm உட்ச டார்க் பெற்றுள்ளது. இதில் ஆட்டோமெடிக் கியர் வசதி உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.