Jawa 90th Anniversary Edition: ஜாவாவின் ஸ்பெஷல் பைக் விலை 1.73 லட்சம் ரூபாய்

Jawa 90th Anniversary Edition: இந்த லிமிடெட் ஜாவா பைக்கை பெற, வாடிக்கையாளர்கள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் அல்லது அக்டோபர் 22, 2019 க்கு முன் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

View Photos
Jawa 90th Anniversary Edition: இந்த பைக் நவம்பர் மாதம் டெலிவரி செய்யப்படும்

இந்தியாவின் கிளாசிக் பைக்குகளில் ஒன்றான ஜாவா (Jawa) மோட்டார்சைக்கிள்கள் பல ஆண்டுகளுக்கு பின்பு சென்ற வருடம் தான் மஹிந்திரா குழும நிறுவனத்தால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமாகி தனது முதல் ஆண்டை நிறைவு செய்யவுள்ளதால், ஜாவா நிறுவனம் ஆண்டுவிழா பதிப்பு (Anniversary edition) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அது அக்டோபர் 15,2019 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. பழைய ரெட்ரோ ஜாவாவை அடிப்படையாகக் கொண்டு, வரையறுக்கப்பட்ட இந்த புது பதிப்பு, 1929 இல் நிறுவப்பட்ட செக் குடியரசின் பைக் தயாரிப்பாளரான ஜாவாவின் 90 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்த லிமிடெட் பைக்கானது வெறும் 90 யூனிட்டுகளுக்கு மட்டுமே தயாரிக்கப்படும். ஜாவா 90 வது ஆண்டுவிழா பதிப்பு பைக்கானது உடனடி டெலிவரிக்கு (delivery) கிடைக்கும். இந்த பைக்கின் விலை 1.73 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4d2kk7qc

Jawa 90th Anniversary Edition: 90 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன

இந்த ஜாவா 90 வது ஆண்டுவிழா பதிப்பு பைக்கானது, 1929 ஜாவா 500 OHV மோட்டார்சைக்கிளின் சிவப்பு மற்றும் கிரீம் வண்ணத்தில் கிடைக்கும். பின்ஸ்டிரைப்ஸில் (Pinstripes)  மூடப்பட்ட Fueltank இந்த பைக்கில் இருக்கும். 90 வது ஆண்டு நிறைவு ஸ்டிக்கரும் உள்ளது. இந்த பைக்கிற்கு கருப்பு நிற இருக்கை உள்ளது.

மேலும் படிக்கமிரட்டலான தோற்றத்தில் வெளி வந்துள்ள ஜாவா பைக்கின் ஸ்பெஷல்ஸ்

tvqk47p

Jawa 90th Anniversary Edition: இதன் விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

மெக்கானிக்கலாக இந்த பைக்கில் 293 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டார் உள்ளது. அது 26 bhp பவரையும் 28 Nm உட்ச டார்க்கையும் தருகிறது. அதே நேரத்தில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த பைக். முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்ஸ் பெற்றுள்ளது இந்த பைக். பிரேக்கிங் செயல்திறன் இரு முனைகளிலும் டிஸ்க்குகளிலிருந்து வரும்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் உள்ள ஜாவா ஷோரூம்கள்

81qs3m88

The Anniversary edition: 1929 ஆம் ஆண்டு பைக்கை போல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த லிமிடெட் ஜாவா பைக்கை பெற, வாடிக்கையாளர்கள் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் அல்லது அக்டோபர் 22, 2019 க்கு முன் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பின்பு இந்த பைக்கை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் இருந்து லக்கி டிரா மூலம் 90 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த 90 பேருக்கு இந்த பைக் நவம்பர் மாதம் வழங்கப்படும்.

0 Comments

தற்போதைய ஜாவா ஒற்றை சேனல் ஏபிஎஸ் பதிப்பிற்கு 1.64 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் இரட்டை சேனல் மாடலின் விலை 1.73 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (அனைத்து விலைகளும், எக்ஸ்ஷோரூம் டெல்லி). இந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகி ஓர் ஆண்டை நிறைவு செய்யும் ஜாவா.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.