இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் ஜாகுவார் லாண்ட் ரோவர்!

2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் தன் முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனமான ஜாகுவார் I – PACE காரை அறிமுகம் செய்யவுள்ளது.

View Photos
ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்கிறது

கார் நிறுவனங்கள், பெட்ரோல் - டீசல் எரிபொருள் கார்களை காட்டிலும் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றன. பல சொகுசு கார் நிறுவனங்கள் இதைப் பற்றி ஏற்கெனவே பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

ஆடி கார் நிறுவனம், இந்தியாவில் e-tron வாகனத்தை 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. அதே போல் போர்ஷ் நிறுவனமும் டேக்கான் காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மெர்சிடிஸ் நிறுவனம், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், ஜாகுவார் லாண்ட் ரோவர், எலக்ட்ரிக் வகை வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

range rover sport phev

பல கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது

2019 ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் தனது முதல் ஹைப்ரிட் காரை அறிமுகம் செய்ய உள்ளது ஜாகுவார் லாண்ட் ரோவர். 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் தன் முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனமான ஜாகுவார் I – PACE காரை அறிமுகம் செய்ய உள்ளது காகுவார்.

jaguar i pace review

2020 ஆம் ஆண்டு முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்கிறது.

0 Comments

ஜாகுவார் லாண்ட் ரோவரின் எம்டி ரோஹித் சூரி கூறுகையில், ‘சுற்றுச்சுழலுக்கு ஏற்றவாறு வாகனங்களை வடிவமைப்பதுதான் ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் குறிக்கோளாகும். எலக்ட்ரிக் வாகனங்கள் மீது அரசு வைத்துள்ள நம்பிக்கையால்தான் ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. FAME –II இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இதற்கு வழிவகுக்கிறது' என்றார்.   

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.