ஹூண்டாய் நிறுவனத்தின் புது கார் அறிவிப்பு - முழு விவரம் உள்ளே...!

இந்த கார் ஆகஸ்ட் 20, 2019 யில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

View Photos

ஹூண்டாய் நிறுவனம் தங்களது புது காரின் பெயரை அறிவித்துள்ளது. புது ஜெனரேசன் கிராண்ட் i10 காரான இதற்கு கிராண்ட் i10 நியோஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் ஆகஸ்ட் 20, 2019 யில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சர்வதேச மார்கெட்டில் i10 என்றும் இந்தியா மார்கெட்டில் கிராண்ட் i10 நியோஸ் எனவும் இந்த கார் அழைக்கப்படவுள்ளது. இந்த காரின் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. முன்பதிவிற்கான தொகை 11,000 ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

oecnid68

ஹுண்டாயின் கிரில் இந்த காரில் உள்ளது

இந்த புது காரில் ஹூண்டாயின் பிரத்யேக ‘காஸ்கேடிங் கிரில்' பொருத்தப்பட்டுள்ளது. உப்புறம் அதிக இடமுள்ளது. காபினில் பிளாக் மற்றும் பீஜ் உள்ளது. ஏபிஎஸ், இரண்டு ஏர்பேக், ஆட்டோமெடிக் கிளைமேட் கண்ட்ரோல் முதலியனவை இந்த காரில் உள்ளது. அது இந்த காருக்கு ஓர் ஸ்போட்ஸ் லுக் தருகிறது.

s5r7q09o

ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியாவின் எம்டி மற்றும் சிஇஓ வான எஸ் எஸ் கிம் கூறுகையில், ‘கடந்த 21 வருடங்களாக புது தொழிற்நுட்பத்தையும் சிறந்த கார்களையும் இந்தியா மார்கெட்டில் அறிமுகம் செய்து ஹூண்டாய் சாதனை படைத்துள்ளது. புது 3வது ஜெனரேசன் கிராண்ட் i20 நியோஸ் காரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமையடைகிறோம். ப்ரோபோசன் (Proportion), வடிவமைப்பு, ஸ்டைல், தொழிற்நுட்பம் என நான்கு குறிக்கோள் உடன் இந்த காரை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அது வாடிக்கையாளர்களுக்கு பிடிக்கும் என எண்ணுகிறோம்' என்றார்

ci7mbkus

இந்த புது காரில் டிசைன் மாற்றங்கள் உள்ளன

0 Comments

இந்த காரின் மெக்கானிக்கல் விவரங்களை ஹூண்டாய் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பெட்ரோல், டீசல் வகைகள் இந்த காரில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.