மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டெஸ்லா' கார்கள் இந்தியாவில் அறிமுகம்? - எலான் மஸ்க் சூசக ட்வீட்

இந்த பட்ஜெட்டில் இந்தியாவில் அசெம்பிளி பிளாண்ட் வைத்தால் இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாகவும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளது.

View Photos

எலக்ட்ரிக் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்த எலக்ட்ரிக் கார்களின் அடையாளமாக கருதப்படுவது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமாகும்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் மார்கெட் என்பது மிக பெரியதாகும். அவ்வாறு இருக்கையில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படுமா செய்யப்படாதா என பல கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் ட்விட்டரில் யஸ்வந்த் ரெட்டி என்பவர் எலான் மஸ்கிடம் ‘இந்தியாவிற்கு எப்போது டெஸ்லா கார்கள் வருகிறது?' என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘இந்தியாவில் இறக்குமதி வரியானது ரொம்ப கூடுதல் (100 சதவிகிதம்) என அறிகிறேன்' என பதிலளித்திருந்தார்.

2014 முதலே இந்தியாவில் டெஸ்லா அறிமுகம் செய்யப்படும் என்ர பேச்சு இருந்து வந்தது. 2016 யில் மாடல் 3 அறிமுகம் செய்தபோது தங்களது லிஸ்டில் இந்தியாவையும் இணைந்திருந்தது டெஸ்லா. 2018 ஆட்டோ எக்ஸ்போ சமயத்தில் எலான் மஸ்க் தெரிவிக்கையில் இந்தியாவில் டெஸ்லாவை அறிமுகம் செய்யும் திட்டம் இருந்தது. ஆனால் அதனை செயல்படுத்த முடியவில்லை என்றார்.

f653e3vg

மாடல் 3 இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இருந்தது

27 லட்சம் ரூபாய் மேல் உள்ள கார்களுக்கு 100 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கிறது இந்தியா. அதற்கு கீழ் இருக்கும் கார்களுக்கு 60 சதவிகிதம் வரி. இதனால் டெஸ்லாவின் மாடல் 3 காரானது 20 – 25 லட்சம் ரூபாய் வரை சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகிறது. அது இந்தியாவிற்கு வந்தால் கடுமையான விலை ஏற்றம் காணும்.

0 Comments

இந்த பட்ஜெட்டில் இந்தியாவில் அசெம்பிளி பிளாண்ட் வைத்தால் இறக்குமதி வரி 10 முதல் 15 சதவிகிதமாகவும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது எங்கள் நிறுவனத்திற்கு நம்பிக்கை அளித்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.