ஆச்சர்யம் ஆனால் உண்மை - இப்போது பைக்கும் 'ஹோம் டெலிவரி' செய்யப்படும்...!

பைக்குகளை ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது ஹீரோ மோட்டர்கார்ப். 349 ரூபாய் இதற்கான டெலிவரி சார்ஜ் ஆகும்.

View Photos
நேற்று முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது

Highlights

  • மூன்று சிட்டிகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இதுவரை 4000 புக்கிங் பெற்றிருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது
  • விரைவில் 25 சிட்டிகளில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது

இதுவரை வீடு தேடி உணவு வந்த நிலையில் இனி பைக்கும் வீடு தேடியே வந்து விடும். ஆம்! நேற்று முதல் பைக்குகளை ஹோம் டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது ஹீரோ மோட்டர்கார்ப். 349 ரூபாய் இதற்கான டெலிவரி சார்ஜ் ஆகும்.

HGPmart.com என்னும் இணையதளத்தில் புக்கிங் செய்பவர்களுக்கு பைக் ஹோம் டெலிவரி செய்யப்படும். முதல் கட்டமாக மும்பை, பெங்களூர், நொய்டா ஆகிய சிட்டிகளில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அதன் பின் 25 சிட்டிகளில் இந்த திட்ட அறிமுகம் செய்யப்படுகிறது. தனது இணையதளம் மூலம் இதுவரை 4000 புக்கிங் பெற்றிருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது.

இதனை குறித்து ஹீரோ மோட்டர்கார்ப் விற்பனை பிரிவு தலைவரான சஞ்சய் பான் கூறுகையில், ‘ஹீரோ மோட்டர் கார்பரேசனில் புது பிசினஸ் மாடலை சாத்தியமாக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். இந்த புது ஹோம் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டத்தை வழங்குகிறோம். மாறி வரும் மார்கெட் நிலவரத்திற்கு ஏற்றது போல் நிறுவனங்களும் மாற வேண்டும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற இடத்தில் பைக்குகள் டெலிவரி செய்யப்படும்' என்றார்.

0 Comments

இந்த ஹோம் டெலிவரி வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது:

  • HGPmart.com என்னும் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
  • விருப்பமுடைய மாடலை தேர்வு செய்ய வேண்டும்
  • அருகில் இருக்கும் டீலர்ஷிப்பை தேர்வு செய்ய வேண்டும்
  • உங்களிடமிருந்து கம்பெனி டீலர்கள் பெற வேண்டிய டாக்குமெண்ட்ஸ் உரிய நேரத்தை பதிவிட வேண்டும்
  • RTO, பணம் செலுத்திய பின் அந்த பைக்கானது ஹோம் டெலிவரி செய்யப்படும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.