ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவா?- அசத்தும் கியா மோட்டர்ஸ் கார்

மெக்கானிக்கலாக 1.4 லிட்டர் GDi டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று வகைகள் இந்த காரில் வந்துள்ளன

View Photos
இந்த காரை முன்பதிவு செய்ய 25,000 ரூபாய் டோக்கன் தொகை கொடுக்க வேண்டும்.

Highlights

  • இதற்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்கியது.
  • இந்த கார் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது
  • இந்த காரை முன்பதிவு செய்ய 25,000 ரூபாய் டோக்கன் தொகை கொடுக்க வேண்டும்.

கியா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் புது கார் கியா செல்டோஸ் ஆகும். இந்த கார் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்கியது. முன்பதிவை துவங்கிய முதல் நாளிலே 6,046 பேர் இந்த காரை முன்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த காரை முன்பதிவு செய்ய 25,000 ரூபாய் டோக்கன் தொகை கொடுக்க வேண்டும்.

seb50th8

முன்பதிவு செய்யப்பட்டதில் 1,628 ஆன்லைன் புக்கிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்டது

கியா மோட்டர்ஸ் இந்தியாவின் விற்பனை மற்றும் மார்கெட்டிங் தலைவரான மனோகர் பத் கூறுகையில், ‘எங்களது விற்பனை பிரிவு இருக்கும் 160 சிட்டிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது கியா செல்டோஸ் கார். பெட்ரோல், டீசல் வகையில் கிடைக்கும் இந்த காரில் மானுவல் மற்றும் ஆட்டோமெடிக் வகை உள்ளது. எங்களது மாடர்ன் ஆட்டொமோட்டிவ் பிளாண்டில் மூன்று லட்சம் எண்ணிக்கை தயாரிக்கும் திறன் கொண்டது.  எனவே கூறிய நேரத்தில் எங்களது காரை டெலிவரி செய்ய எண்ணுகிறோம்' என்றார்.

முதல் நாளில் முன்பதிவு செய்யப்பட்டதில் 1,628 ஆன்லைன் புக்கிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்டது.  மற்ற முன்பதிவுகள் நாடு முழுவதும் உள்ள 160 கியா ஷோரூம்களில் இருந்து பெறப்பட்டது.

mg0nb8tc

இந்த காரானது டெக் லைன், ஜிடி லைன் என இரண்டு வகையில் வரும் 

டெக் லைன், ஜிடி லைன் என இரண்டு வகையில் வரும் இந்த காரில் E, K, K+, X, X+ என ஐந்து மாடல்கள் உள்ளன. 8.0 ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 10.25 HD தொடுதிரை, 360 டிகிரி காமரா, UVO சிஸ்டம், AI வாய்ஸ் கமண்ட் முதலியனவை இந்த காரில் உள்ள தொழிற்நுட்ப அம்சங்கள்.

0 Comments

மெக்கானிக்கலாக 1.4 லிட்டர் GDi டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று வகைகள் இந்த காரில் வந்துள்ளன. இந்த மூன்று வகை இன்ஜின்களிலும் ஆறு ஸ்பிட் மானுவல் ஆட்டோமெடிக் வசதியுள்ளது. டர்போ பெட்ரோலில் DCT ஆட்டோமெடிக், 1.5 லிட்டர் பெட்ரோலில் IVT ஆட்டோமெடிக் வசதி உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.