ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த எஸ்.யூ.வி கார்… - முழு விவரம் உள்ளே!

2016 ஆம் ஆண்டு, இந்த கார் குறித்து முதன்முறையாக தெரிவித்தது ஹூண்டாய் நிறுவனம்

View Photos
வென்யூ காரில், புதுவித எல்.ஈ.டி லைட், டே-டைம் ரன்னிங் விளக்குகள், நீள் சதுர வடிவிலான ஃபாக் லைட், டூயல் டோன் அல்லாய் சக்கரங்கள் போன்றவை இடம் பெறும். 

ஹூண்டாய் நிறுவனம், தனது அடுத்த எஸ்.யூ.வி வகை கார் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த காரின் பெயர் ‘வென்யூ' என இருக்கும் என்று தெரிவித்துள்ளது ஹூண்டாய். 

இந்த காரின் மூலம் மக்கள், அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்குச் செல்ல விரும்புவர். அதனாலேயே, வென்யூ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் கூறுகிறது. நியூ யார்க் மோட்டர் ஷோவில் இந்த எஸ்.யூ.வி கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்று ஹூண்டாய் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. 

sif57j4
ஹூண்டாய் வென்யூ, இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களைச் செய்து கொண்டிருந்த போதே, அது பலமுறை படம் எடுக்கப்பட்டது. அப்போது அதன் பெயர் அறிவிக்கப்படவில்லை. இப்போது பெயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

வென்யூ காரில், புதுவித எல்.ஈ.டி லைட், டே-டைம் ரன்னிங் விளக்குகள், நீள் சதுர வடிவிலான ஃபாக் லைட், டூயல் டோன் அல்லாய் சக்கரங்கள் போன்றவை இடம் பெறும். 

95ihto5o

2016 ஆம் ஆண்டு, இந்த கார் குறித்து முதன்முறையாக தெரிவித்தது ஹூண்டாய் நிறுவனம். அப்போது நடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போ-விலும் கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது வெளிவரும் வென்யூ கார், டிசைன் ரீதியில் முற்றிலும் புதுமை பெற்றிருக்கும். 

0 Comments

வென்யூ, டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். 1.2 லிட்டர் அளவு கொண்ட பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் அளவு கொண்ட டீசல் ஆகிய வகைகளில் இந்த கார் வெளிவர அதிக வாய்ப்புள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.