Market Share: புது உச்சத்தை தொட்டது ஹூண்டாய் நிறுவனம்...!

ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த காரான கிரிட்டா இரண்டாம் ஜெனரேசனை 2020 யில் அறிமுகம் செய்யவுள்ளது.

View Photos
தனது சென்னை பிளாண்டில் அதிகம் முதலீடு செய்துள்ளது ஹூண்டாய்

தொடர் வீழ்ச்சியில் இருக்கும் ஆட்டோமொபைல் துறைக்கு ஓர் புத்துணர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டர் இந்தியாவின் (Hyundai Motors India) பங்கு உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் இந்தியா கார் மார்கெட்டில் ஹூண்டாயின் பங்கு 19.4 சதவிகிதமாக இருந்தது. இந்தியா கார் மார்கெட்டில் ஹூண்டாயின் அதிக பட்ச பங்கு இதுவாகும்.

விற்பனை விகிதத்தில் வீழ்ச்சியை சந்தித்தாலும் ஏனைய கார்களின் விற்பனையை ஒப்பிடும் போது ஹூண்டாய் பெரிய ஏமாற்றத்தை சந்திக்கவில்லை. விற்பனையில் 3.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது ஹூண்டாய். அதே நேரம் மாருதி சூசுகியின் பங்கு 35.1 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.

knn8v09o

ஹுண்டாய் வென்யூ அதிகமாக விற்பனையாகியுள்ளது 

இது குறித்து ஹுண்டாய் மோட்டர்ஸ் இந்தியாவின் எம்டி எஸ்எஸ் கிம் கூறுகையில், ‘FY 18-19 யில் 5,45,243 வாகனங்களை இந்தியாவிலும் 1,62,105 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது ஹுண்டாய் மோட்டர்ஸ். ஜூலை 2019 யில் விற்பனையான 39000 யூனிட்களில் 9585 யூனிட்கள் வென்யூ (Venue) ஆகும். ஜூலை மாதத்தில் மார்கெட் பங்கில் 3 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 19.4 சதவிகிதமாக உள்ளது ஹூண்டாய்' என்றார்.

மார்கெட் பங்குகளில் மாருதி 51.57 சதவிகிதம் இருந்து 51.07 சதவிகிதமாகவும் டாடா மோட்டர்ஸ் 6.49 சதவிகிதத்தில் இருந்து 5.90 சதவிகிதமாகவும் போர்ட் 3.07 சதவிகிதத்தில் இருந்து 2.66 சதவிகிதமாகவும் வீழ்ச்சியடைந்தது.

n1o87c38

ஹூண்டாயின் புது ஜெனரேசன் கிரிட்டா அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும்

டாடா நிறுவனத்திற்கு டாடா Tiago, Zest ஆகிய கார்களும் போர்ட் நிறுவனத்திற்கு எக்கோஸ்போர்ட் காரும் அதிகம் விற்பனையானது. மாருதிக்கு பிரிஸாவும் ஹுண்டாய்க்கு வென்யூ காரும் அதிகம் விற்பனையாகிறது.

0 Comments

ஹூண்டாய் நிறுவனத்தின் புது ஜெனரேசன் கிராண்ட் i10 Nios நல்ல வரவேற்பு பெறும் என எண்ணப்படுகிறது. அதே நேரம் ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த காரான கிரிட்டா இரண்டாம் ஜெனரேசனை 2020 யில் அறிமுகம் செய்யவுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.