விற்பனையில் சாதனை படைத்த ஹுண்டாய் கார்!

காரின் விலை 9.60 லட்சம் ரூபாய் முதல் 15.63 லட்சம் ரூபாய் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது.

View Photos
எஸ்யூவி பிரிவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமை க்ரீடாவையே சேரும்

Highlights

  • இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேல் க்ரீடா கார்கள் விற்பனையாகியுள்ளது
  • இந்தியாவில் மட்டுமே 3.70 லட்சம் க்ரீடா கார்கள் விற்பனையாகியுள்ளது
  • 1.40 லட்சம் க்ரீடா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

2015 ஆம் ஆண்டு அதிக எதிர்பார்ப்புக்கு இடையே ஹுண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த கார் தான் ஹுண்டாய் க்ரீடா. அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த கார் விற்பனையில் புது சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஹுண்டாய் க்ரீடா கார், இந்தியாவில் 3.70 லட்சம் மற்றும் ஏற்றுமதியில் 1.40 லட்சம் என மொத்தம் ஐந்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளது.

சராசரியாக மாதம் 10,000 க்ரீடா கார்கள் விற்பனையாகின்றன. இந்த காரின் விலை 9.60 லட்சம் ரூபாய் முதல் 15.63 லட்சம் ரூபாய் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது.

0avoroc

சராசரியாக மாதம் 10,000 கார்கள் வரை இந்த கார் விற்பனையாகிறது

இது குறித்து ஹுண்டாய் நிறுவனத்தின் விற்பனை தலைவர் விகாஸ் ஜெயின் கூறுகையில், ‘டிசைன், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் கலந்தது இந்த ஹுண்டாய் க்ரீடா. தற்போதைய மக்களின் தேவையை நிறைவு செய்வதில் க்ரீடா முதன்மையானது. 4 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கார்கள் விற்று சாதனைப் படைத்துள்ளது க்ரீடா. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எஸ்யூவி கார் ஒன்றின் விற்பனையில் இது மகத்தான சாதனையாகும்' என்றார்.

s72ffpg8

இந்த கார் மூன்று விதமான இன்ஜின்களில் கிடைக்கிறது

2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த க்ரீடா காரானது 2018 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. டெக்னிக்கலாக எலக்ட்ரிக் சன்ரூப், 6 வகையில் மாற்றப்படும் ஒட்டுநர் இருக்கை, வயர்லெஸ் மொபைல் சார்ஜர் பெற்றுள்ளது.

0 Comments

மெக்கானிக்கலாக, 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பெற்றுள்ள இந்த கார், 121 bhp மற்றும் 151 Nm டார்க் வெளியிடுகிறது. 1.6 லிட்டர் டீசல் இன்ஜின், 129 bhp மற்றும் 260 Nm டார்க் வெளியிடுகிறது. 1.4 லிட்டர் டீசல் இன்ஜின், 89 bhp மற்றும் 220 Nm டார்க் வெளியிடுகிறது. மானுவல் கியர் வசதி பெற்றுள்ள இந்த கார், 1.6 லிட்டர் மாடலுக்கு மட்டும் ஆட்டோமெடிக் வசதி பெறுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.