New Cars and Bikes in India

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை மூடப்படுகிறது

இந்த தயாரிப்பு ஆலையை 2021 ஆம் ஆண்டு மூட ஹோண்டா முடிவு செய்துள்ளது.

View Photos
ஐரோப்பிய யூனியன் தயாரிப்பு ஆலையை 2021 ஆம் ஆண்டு மூட ஹோண்டா முடிவு செய்துள்ளது.

பிரெக்சிட், எரிபொருள் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் மாசு என பல காரணங்களால் ஆட்டோமொபைல் தயாரிப்பு துறையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் மாசடைவதால் பலர் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா, ஐரோப்பிய யூனியனில் செயல்படுத்தி வந்த ஹோண்டா தயாரிப்பு ஆலையை மூட திட்டமிட்டுள்ளது.

சுவிடனில் செயல்பட்டு வரும் இந்த ஆலையானது ஐரோப்பிய யூனியனில் ஹோண்டாவுக்கு இருக்கும் ஒரேயொரு தயாரிப்பு ஆலையாகும்.

இந்த ஆலையில் 3,500 பேர் வேலை செய்கின்றனர். இதுவரை 30 இலட்சம் கார்கள் இந்தத் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆலையில் வருடம் ஒன்றுக்கு 1,50,000 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தத் தயாரிப்பு ஆலையை 2021 ஆம் ஆண்டு மூட ஹோண்டா முடிவு செய்துள்ளது.

‘மிக விரைவாக மாறிவரும் வாகன தயாரிப்பு தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கவே பல முக்கிய முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டியதுள்ளது. எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் அதிக முதலீடு செய்ய உள்ளதால் ஐரோப்பிய யூனியனில் செயல்படும் ஹோண்டா தயாரிப்பு ஆலையை மூட முடிவு செய்துள்ளோம்' என ஹோண்டா நிறுவனத்தின் கட்சுசி இனவ்யூ தெரிவித்தார்.

0 Comments

பிரெக்சிட் நிலைமையால் பல முன்னணி கார் நிறுவனங்கள் பிரிட்டனில் உள்ள தங்களது தயாரிப்பு ஆலையில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.