ஹோண்டா பைக்குகளுக்கு அப்டேட்... விவரங்கள் உள்ளே!

ஏப்ரல் 1, 2019 முதல் இந்தியாவில் பைக்குகளில் சில பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.

View Photos
ஹோண்டா சிடி 110 மற்றும் நேவி பைக்குகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளான நேவி மற்றும் சிடி 100 அப்டேட் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 1, 2019 முதல் இந்தியாவில் பைக்குகளில் சில பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், நேவி மற்றும் சிடி 100 பைக்குகளில் சிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ் வசதியுடன் வரும் நேவி பைக்கின் விலை 47,110 ரூபாயாக நிர்ணக்கப்பட்டுள்ளது. சிடி 100 சிபிஎஸ் பைக் ரூபாய் 51,528 ஆகும்.

 

2miebnp8சிபிஎஸ் வசதியைத் தவிர மெக்கானிக்கல் மற்றும் டெக்னிக்கல் மாற்றங்கள் இந்த ஹோண்டா பைக்குகளில் இல்லை

சிபிஎஸ் வசதியைத் தவிர இந்த இரண்டு பைக்குகளில் மெக்கானிக்கல் மாற்றம் இல்லை. நேவி பைக் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 8 bhp மற்றும் 8.94 Nm டார்க் வசதி பெற்றுள்ளது.

0 Comments

ஹோண்டா சிடி 110 பைக் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பெற்றுள்ளது. இந்த இன்ஜின் 8.31 bhp மற்றும் 9.09 Nm டார்க் வசதி பெற்றுள்ளது. இந்த பைக்கில் 4 ஸ்பிடு கியர் வசதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.