ஹோண்டா சிவிக் காரின் தயாரிப்புத் துவக்கம்!

முதல்முறையாக இந்தியாவில் சிவிக் காருக்கு டீசல் இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

View Photos
இந்த புதிய காரில், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வகைகள் உள்ளன

ஹோண்டா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்று ஹோண்டா சிவிக் ஆகும். இந்த காரின் பத்தாவது ஜெனரேஷன் தற்போது தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் மார்ச் 7, 2019 –இல் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த புது சிவிக், நோய்டாவில் உள்ள ஹோண்டா தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பழைய மாடல் சிவிக் காரை ஒப்பிடும் போது, புது சிவிக் காரில் பல டெக்னிக்கல் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் உள்ளன. புது ஜெனரேஷன் சிவிக் காரில் டீசல் இன்ஜின் உள்ளது.

36ua5te8

சிவிக் காருக்கு அதிக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் துணைத் தலைவர் ராஜேஷ் கொயல் கூறுகையில், ‘புது சிவிக் காரை மார்ச் 7 ஆம் தேதி அறிமுகம் செய்வதில் நாங்கள் மிகவும் சந்தோசமாக உள்ளோம். மேலும் மக்கள் இந்த சிவிக் காருக்கு அதிக அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஏற்கெனவே நாங்கள் எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

டெக்னிக்கலாக இந்த புது ஜெனரேஷன் சிவிக் காரில் பல மாற்றங்கள் உள்ளன. சி வடிவத்தில் டெயில் லைட் உள்ளது. எலக்ட்ரிக் சன்ரூப், ஓட்டுநர் இருக்கையை 8 விதங்களில் மாற்றும் வசதி, ஆறு ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் என சகலமும் இந்த சிவிக் காரில் உள்ளது.

bgcogffo

புது சிவிக் கார் பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் கிடைக்கும்

0 Comments

மெக்கானிக்கலாக, 1.8 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் உள்ளது. அந்த இன்ஜின் 6500 rpm யில் 139 bhp பவரையும் 4300 rpm யில் 174 Nm டார்க்கையும் வெளியிடும். முதல்முறையாக இந்தியாவில் சிவிக் காருக்கு டீசல் இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது, 4000 rpm யில் 118 bhp பவரையும் 2000 rpm இல் 300 Nm டார்க்கையும் வெளியிடும். மேலும் பெட்ரோல் வகை சிவிக், ஒரு லிட்டருக்கு 16.5 கிலோ மீட்டரும் டீசல் வகை சிவிக் ஒரு லிட்டருக்கு 26.8 கிலோ மீட்டரும் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.