இந்தியாவில் அறிமுகம் ஆனது 'ஹோண்டா சிவிக்' கார்; விவரங்கள் உள்ளே!

V, VX, ZX என மூன்று வகையில் வெளிவந்திருக்கிறது இந்த புது ஹோண்டா சிவிக்.

View Photos
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் புது சிவிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Highlights

  • டீசல் மற்றும் பெட்ரோல் வகையில் இந்த கார் கிடைக்கிறது
  • இந்த காரின் ஆரம்ப விலை 17.70 லட்சம் ரூபாயாகும்
  • டீசல் வகை சிவிக் ஒரு லிட்டருக்கு 26.8 கிலோ மீட்டரும் மைலேஜ் தரும்

ஹோண்டா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்று ஹோண்டா சிவிக் ஆகும். 7 ஆண்டுகளுக்குப் பின் இந்த காரின் பத்தாவது ஜெனரேஷன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பழைய மாடல் சிவிக் காரை ஒப்பிடும் போது, புது சிவிக் காரில் பல டெக்னிக்கல் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் உள்ளன. முக்கியமாக புது ஜெனரேஷன் சிவிக் காரில் டீசல் இன்ஜின் உள்ளது.

i8emtsfoஇந்த கார் மூன்று மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த காரின் விலை மாடலுக்கு ஏற்றவாறு 17.70 லட்சம் ரூபாயில் இருந்து 22.30 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. V, VX, ZX என மூன்று வகையில் வெளி வந்திருக்கிறது இந்த புது ஹோண்டா சிவிக்.

mg0nnm7oஇந்த காரின் உட்புற டிசைன் முற்றிலும் புதுமையாக உள்ளது 

டெக்னிக்கலாக இந்த புது ஜெனரேஷன் சிவிக் காரில் பல மாற்றங்கள் உள்ளன. சி வடிவத்தில் டெயில் லைட் உள்ளது. எலக்ட்ரிக் சன்ரூப், ஓட்டுநர் இருக்கையை 8 விதங்களில் மாற்றும் வசதி, ஆறு ஏர் பேக், ஏபிஎஸ், இபிடி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் என சகலமும் இந்த சிவிக் காரில் உள்ளது.

c7h2mgtoஇந்த புது சிவிக் காரில் முதல் முறையாக டீசல் இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
0 Comments

மெக்கானிக்கலாக, 1.8 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் உள்ளது. அந்த இன்ஜின் 6500 rpm யில் 139 bhp பவரையும் 4300 rpm யில் 174 Nm டார்க்கையும் வெளியிடும். முதல்முறையாக இந்தியாவில் சிவிக் காருக்கு டீசல் இன்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது, 4000 rpm யில் 118 bhp பவரையும் 2000 rpm இல் 300 Nm டார்க்கையும் வெளியிடும். மேலும் பெட்ரோல் வகை சிவிக், ஒரு லிட்டருக்கு 16.5 கிலோ மீட்டரும் டீசல் வகை சிவிக் ஒரு லிட்டருக்கு 26.8 கிலோ மீட்டரும் மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.