New Cars and Bikes in India

வந்துவிட்டது புதிய ஹோண்டா சிட்டி... விலை என்ன தெரியுமா?

இது, மாருதி சூசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, வோல்க்ஸ்வாகன் வெண்டோ ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

View Photos
இது தற்போது பெட்ரோல் வகையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஹோண்டா கார்ஸின் புதிய ZX MT ஹோண்டா சிட்டி பெட்ரோல் வகை கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் மற்றும் லுனார் சில்வர் மெட்டாலிக் என இரு வண்ணங்களில் வரும் இந்த புதிய காரின் விலை 12.75 இலட்சமாகும். பெட்ரோல் வகை கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால்,  புதிய ZX MT ஹோண்டா சிட்டி பெட்ரோல் இன்ஜின் வகையில் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்ஸின் துணை தலைவர் ராஜேஷ் கொயல் கூறுகையில், ‘ஹோண்டா சிட்டி ZX MT வகை காரை பெட்ரோல் இன்ஜின் மற்றும் மானுவல் கியர் வசதியுடனும் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். இந்த கார் மூலம், மக்களுக்கு ZX வகையில் மேலும் ஒரு சிறந்த காரை ஹோண்டா வழங்கியுள்ளது. இதற்கும் மக்கள் தங்களது ஆதரவை தருவார்கள் என எண்ணுகிறேன்' என்றார்.

gan65ob

அதே 1.5 லிட்டர் மோட்டருடனே இந்த புது காரும் வருகிறது

இந்த காரின் டெக்னிக்கல் அம்சங்களை பொருத்தவரையில், ஆறு ஏர் பேக், LED ஹெட்லாம்ப் ( Headlamp ) , எலக்ட்ரிக் சன் ரூப், ஆட்டோ ஹெட்லைட், டைமண்ட் கட் 16 இன்ச் அலாய் வீல் என பல புதுமைகள் உள்ளன.

இதன் மூலம் தற்போது ஹோண்டா சிட்டி காரானது பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் மானுவல் கியர் வசதியுடன் SV, V, VX, ZX என நான்கு வகையிலும் வருகிறது.

0 Comments

இது, மாருதி சூசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, வோல்க்ஸ்வாகன் வெண்டோ ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.