பைக்குகளை திரும்ப பெறும் ஹோண்டா... என்ன காரணம்..?

கியர்கள் லைனில் இல்லாததால் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது நியூட்ரலில் இருந்து ஆட்டோமெடிக்காக கியரில் செல்கிறது

View Photos
அமெரிக்காவில் மட்டுமே பைக்குகள் திரும்ப பெறப்படுகிறது.

அமெரிக்கா ஹோண்டா மோட்டர் கோ. ஹோண்டா சிபிஆர் 300 ஆர் பைக்கை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த பைக்குகளில் கியரில் பிரச்சனை இருப்பதாலும் அதனால் தான் 3898 ஹோண்டா பைக்குகளை அமெரிக்காவில் திரும்ப பெறுவதாகவும் NHTSA யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்ப பெறப்படும் பைக்குகளில் 2019 சிபி 300 ஆர், 2018 சிபி 300 ஆர், 2018 சிஆர்எப் 250 எல், 2018 சிஆர்எப் 250 எல் ராலி, 2018 – 2019 சிஎம்எக்ஸ் 300 ஆகியவை அடங்கும். ஜூன் 28, 2019 முதல் இந்த பைக்குகள் திரும்ப பெறப்படுகின்றன.

fveflpus147 கிலோ எடையுடன் 286 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டர் பெற்றுள்ளது சிபி 300 ஆர் பைக்

கியர்கள் லைனில் இல்லாததால் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது நியூட்ரலில் இருந்து ஆட்டோமெடிக்காக கியரில் செல்கிறது. இது ட்ரான்ஸ்மிஷனை லாக் செய்ய வாய்ப்புள்ளது. இதனை ஹோண்டா இலவசமாக சரி செய்து தரவுள்ளது. எனவே தான் குறிப்பிட்ட பைக்குகளை திரும்ப பெறுகிறது ஹோண்டா.

அமெரிக்காவில் மட்டுமே பைக்குகள் திரும்ப பெறப்படுகிறது. வேறு நாடுகளுக்கு அறிவிப்பை வெளியிடவில்லை ஹோண்டா. இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் சிபி 300 ஆர் பைக்கை அறிமுகம் செய்தது ஹோண்டா. 147 கிலோ எடையுடன் 286 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டர், 30 bhp பவர் மற்றும் 27.4 Nm உட்ச டார்க்கை வெளியிடும் திறன் கொண்டது சிபி 300 ஆர்.

0 Comments

கேடிஎம் 390 டியூக், பெனிலி டிஎண்டி 300, பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர், ராயல் எண்பிள்ட் இண்டர்செப்டர் 650 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட சிபி 300 ஆர் பைக்கின் விலை 2.41 லட்சம் ரூபாயாகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.