ஹோண்டா நிறுவன வாகன விற்பனை 48 சதவிகிதம் சரிந்தது!

சென்ற ஆண்டு இரண்டாம் ஜெனரேசன் ஹோண்டா அமேஸ் கார் அதிகம் விற்பனையானது

View Photos
ஹோண்டா அமேஸ் கார் மே 16, 2018 யில் அறிமுகம் செய்யப்பட்டது

Highlights

  • ஜூலை 2019 யில் 10,250 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்த ஹோண்டா
  • கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனமானது 19,970 யூனிட்கள் விற்றது
  • ஹோண்டா நிறுவனம் மாபெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு ஓர் சோதனை காலமாகவே அமைந்தது. தற்போது ஜூலை மாத விற்பனை ரிப்போர்ட்கள் வெளியாகியுள்ளன. இதில் ஹோண்டா நிறுவனம் மாபெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

ஜூலை மாதம் 10,250 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்த ஹோண்டா நிறுவனமானது 48.67 சதவிகித சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹோண்டா நிறுவனமானது 19,970 யூனிட்கள் விற்றது. அதனை ஒப்பிடும் போது ஜூலை 2019 விற்பனையானது 9720 யூனிட்கள் குறைவாகும்.

இதனை குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் விற்பனை மற்றும் மார்கெட்டிங் இயக்குநரான ராஜேஷ் கோயல் கூறுகையில், ‘ஆட்டோமொபைல் துறை தற்போது சரிவை சந்திக்கிறது. வாகனம் வாங்க எண்ணுபவர்கள் அந்த திட்டத்தை தள்ளி போட்டு கொண்டிருக்கிறார்கள். ஜூலை 2019 சரிவு என்பது முதல் குவார்ட்டர் சரிவை விட கூடுதலாகும்' என்றார்.

சென்ற ஆண்டு இரண்டாம் ஜெனரேசன் ஹோண்டா அமேஸ் கார் அதிகம் விற்பனையானது. மே 16, 2018 யில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அமேஸ் காரானது ஹோண்டா நிறுவனத்தின் சிறந்த மாடலாக கருதப்படுகிறது. அதன் விற்பனை தான் ஜூலை 2018 மாதத்தின் விற்பனை கூட முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

0 Comments

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.