இந்த ஹோண்டா கார் இனி சந்தையில் கிடைக்காது... எந்த கார் தெரியுமா?

அறிமுகம் செய்ததில் இருந்து இந்நாள் வரை வெறும் 97,000 ப்ரியோ கார்களே விற்பனை ஆகியுள்ளன

View Photos
செப்டம்பர் 2011 –யில் ப்ரியோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா நிறுவனம்.

கார்கள் பிரிவில் ஹோண்டா நிறுவனத்தின் என்டரி காராக ப்ரியோ இருந்து வந்தது. ப்ரியோ கார் சில டிசைன் மாற்றங்கள் உடன் 2016 ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தும் அதன் விற்பனை பெரியளவில் இல்லை. அதனால் ப்ரியோவின் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது ஹோண்டா.

பிடிஐ-க்கு ஹோண்டா கார்ஸ் நிறுவனைத்தைச் சேர்ந்த ராஜேஷ் கொயல் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின் என்டரி கார் அமேஸ்  ஆகும். ப்ரியோவின் தயாரிப்பை நாங்கள் நிறுத்திவிட்டோம். பிரியோவை தயாரிக்கும் எண்ணம் இல்லை' என்றுள்ளார்.

new honda amaze

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் கார்கள் விர்பனையில் பல சாதனைகள் செய்துள்ளது

ஹோண்டாவின் அமேஸ் கார், விற்பனையில் பல சாதனைகள் செய்து வருகிறது. அறிமுகம் செய்து ஒரு வருடத்திற்குள் 63,000 கார்களை விற்று சாதனை செய்தது அமேஸ்.

2016 honda brio

ஹோண்டா ப்ரியோ காரின் தயாரிப்பு முடிவிற்கு வந்துள்ளது

செப்டம்பர் 2011 –யில் ப்ரியோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா நிறுவனம். அறிமுகம் செய்ததில் இருந்து இந்நாள் வரை வெறும் 97,000 ப்ரியோ கார்களே விற்பனை ஆகியுள்ளன.

0 Comments

2020 ஆம் ஆண்டுக்குள் 6 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி புது ஜெனரேஷன் அமேஸ் மற்றும் புது ஜெனரேஷன் CR-V காரை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. அடுத்த காராக புது ஜெனரேஷன் சிவிக் காரை மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது ஹோண்டா நிறுவனம்

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.