Harley Davidson : ஐரோப்பாவில் தடம் பதிக்கும் ஹார்லி டேவிட்சன்!

எலக்ட்ரிக் பைக்குகளிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளது ஹார்லி டேவிட்சன்

View Photos
ஐரோப்பாவில் விரைவில் தயாரிப்பு ஆலை அமைக்கலாம் ஹார்லி டேவிட்சன்

Highlights

  • அமெரிக்கா - ஐரோப்பா யூனியன் இடையே வர்த்தக போர் உள்ளது
  • 2020 யில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது ஹார்லி டேவிட்சன்
  • ஐரோப்பா மார்கெட் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது

உலகில் பைக் தயாரிப்பில் தனக்கென தனி இடம் பெற்றது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். அமெரிக்க நிறுவனமான ஹார்லி டேவிட்சன், ஐரோப்பியாவில் தயாரிப்பு ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவிர்கும் ஐரோப்பா யூனியனுக்கும் வர்த்தகத்தில் சில முரண்பாடுகள் உள்ளது. இதனால் ஐரோப்பா யூனியன், அமெரிக்கா தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் பைக்கிற்கு அதிக விலை நிர்ணைத்துள்ளது. 

இது குறித்து ஹார்லி டேவிட்சனின் சிஇஒ மாட் லெவதிச் கூறுகையில் ‘அமெரிக்கா ஐரோப்பா யூனியன் இடையே நடக்கும் வர்த்தக போர் முடிவு பெறவில்லை என்றால் ஐரோப்பாவில் தயாரிப்பு ஆலை அமைக்க வேண்டிய நிலைமை வரும்' என்றார்.

7fcakd88

ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகளில் ஹார்லி டேவிட்சனின் விலை 56 சதவிகிதம் உயரலாம்

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு தற்போது 31 சதவிகிதம் அதிக விலை நிர்ணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு ஆண்டுகளில் 56 சதவிகிதமாக உயர வாய்ப்புள்ளது. அமெரிக்கா, இறக்குமதி செய்யப்படும் ஸ்டில் மற்றும் அலுமினியத்திற்கு அதிக விலை நிர்ணயம் செய்ததால் தான் ஐரோப்பா யூனியன் ஹார்லி டேவிட்சனுக்கு அதிக விலை நிர்ணயம் செய்துள்ளது.S.

mld4uu6

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு ஐரோப்பா மார்கெட் மிக முக்கியமானது

வெளிநாடுகளில் தயாரிப்பு ஆலை அமைக்க எண்ணிய ஹார்லி டேவிட்சனின் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப் கடும் விமர்சனத்தை முன் வைத்தார். பிரேசில், இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய இடங்களிலும் தயாரிப்பு ஆலையை அமைக்க ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது.

0 Comments

2020 யில் மூன்று புது மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது ஹார்லி டேவிட்சன். அது போக எலக்ட்ரிக் பைக்குகளிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளது ஹார்லி டேவிட்சன். எலக்ட்ரிக் வாகன விற்பனைக்கு ஐரோப்பா மார்கெட் மிக முக்கியமானது. எனவே ஹார்லி டேவிட்சன் அங்கு தயாரிப்பு ஆலையை அமைக்க அதிக் வாய்ப்புள்ளது

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.