ஹார்லி டேவிட்சனின் இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க அரிய வாய்ப்பு!

இந்த இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க, சுதந்திரம் என்றால் என்ன என்ற தலைப்பில் புதுமையான வீடியோ ஒன்றை தயாரிக்க வேண்டும்

View Photos
இந்தியாவில் 10வது ஆண்டை கொண்டாடும் விதமாக இதனை அறிவித்துள்ளது ஹார்லி டேவிட்சன்

Highlights

  • மூன்று பேர் இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
  • தேர்ந்தெடுக்கபடுபவர்கள் ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள்
  • இண்ஸ்டாகிராமில் இதற்கானதை சமர்பிக்கலாம்

உலக புகழ் பெற்ற பைக் நிறுவனங்களில் ஒன்று, ஹார்லி டேவிட்சன். இது இந்தியாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து ஒரு புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோடை கால இன்டர்ன்ஷிப் அறிவித்துள்ள ஹார்லி டேவிட்சன், தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஹார்லி டேவிட்சனின் சமூக வலைதளம் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவுடன் பயிற்சி பெறும் வாய்ப்பினை தரும். இந்த அரிய இன்டர்ன்ஷிப் பற்றி மார்ச் 31 ஆம் தேதி அறிவித்தது ஹார்லி டேவிட்சன். ஹார்லி டேவிட்சன் ரசிகர்களிடம் இருந்து இன்டர்ன்ஷிப் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் இயக்குநரான சஜீவ் ராஜசேகரன் கூறுகையில், ‘இந்தியாவில் முதல் முறையாக இன்டர்ன்ஷிப் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். இதன் மூலம் ஹார்லி டேவிட்சன் பற்றி இளைஞர்களுக்கு அறிமுகம் செய்யப்படும். இன்னும் சில மாதங்கள் இந்த இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க விண்ணப்பங்கள் பெறப்படும். பின்பு அதிலிருந்து மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' என்றார்.

0 Comments

இந்த இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க, சுதந்திரம் என்றால் என்ன என்ற தலைப்பில் புதுமையான வீடியோ ஒன்றை தயாரிக்க வேண்டும். அதனை புகைப்படம் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் வெளிப்படுத்தலாம். அதனை ஹார்லி டேவிட்சன் இந்தியாவின் இன்ஸ்டாகிராம் பிரிவில் சமர்பிக்க வேண்டும். அதில் எது புதுமையாகவும் சிறந்ததாகவும் இருக்கின்றது என்பதைத் தேர்ந்தெடுத்து இன்டர்ன்ஷிப்பில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.