தயாரிப்பு ஆலையை மூடும் நம்பர்.1 கார் நிறுவனம்

டெத்ராய்ட் ஆலையில் 2020 ஆம் ஆண்டு வரை கார்கள் தயாரிக்க ஜெனரல் மோட்டர்ஸ் முடிவு செய்துள்ளது.

View Photos
ஜுன் மாதம் இந்த ஆலை மூடப்படுவதாக இருந்தது.

அமெரிக்காவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனம் ஜெனரல் மோட்டர்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு ஆலை அமெரிக்காவின் டெத்ராய்ட் மாகாணத்தில் உள்ளது.

இந்த தயாரிப்பு ஆலையில் தான் செவ்ராலட் இன்பாலா, காதியாலிக் சிடி6, செவ்ராலட் வோல்ட் எலக்ட்ரிக் ஹைப்ரிட் கார் உட்பட பல கார்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆலையை ஜுன் 2019 உடன் மூட ஜெனரல் மோட்டர்ஸ் முடிவு செய்திருந்தது. அமெரிக்காவில் எரிபொருள் கார்களை விட எலக்ட்ரிக் கார்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் பல வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஜெனரல் மோட்டர்ஸ் தன் முடிவை மாற்றியுள்ளது. டெத்ராய்ட் ஆலையில் 2020 ஆம் ஆண்டு வரை கார்கள் தயாரிக்க ஜெனரல் மோட்டர்ஸ் முடிவு செய்துள்ளது.

‘நாங்கள் தயாரிப்பு நேர்த்தியடையும் ஆராய்ச்சிக்கான நேரத்தையும் சரிசமமாக பார்த்து கொள்கிறோம். அடுத்த ஆண்டின் துவக்கம் வரை செவ்ராலட் இம்பாலா மற்றும் காதியாலிக் சிடி6 காரை தயாரிக்கவுள்ளோம்' என ஜெனரல் மோட்டர்ஸ் தெரிவித்தது.

டெத்ராய்ட் மாகாணத்தின் கூட்டமைப்பு தலைவர் ஜோன்ஸ், ‘ஜெனரல் மோட்டர்ஸின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதரம் கேள்விகுறியாகமல் இருக்கும்' என்றார்.

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.