ஜெர்மனியில் இனி டீசல் கார்களுக்குத் தடை!

ஜெர்மனியில் இனி டீசல் கார்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

View Photos

Highlights

  • ஆட்டோ துறைக்கு இந்த உத்தரவு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது
  • ஏஞ்சலா மெர்க்கலுக்கும் இந்த உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தும்
  • ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மதித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

ஜெர்மனியில் இனி டீசல் கார்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி மாதம், ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்று, சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் டீசல் கார்களுக்கு உடனடியாக தடை விதியுங்கள் என்று முக்கிய நகரங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், வோல்க்ஸ்வாகன் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கும் கம்பஷன் இன்ஜினுக்கு மாற்றைத் தேடுவதில் அழுத்தம் கொடுக்க முடியுமென்று கருதப்படுகிறது. மேலும், வாகனத்தின் புகை வெளியேற்றும் அமைப்பிலும் இந்த தீர்ப்பினால் மாற்றம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, ஜெர்மனியில் காற்று மாசைக் குறைக்கவே இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

இது குறித்து 30 பக்க தீர்ப்பு வெளியிட்ட ஜெர்மனியின் லெய்ப்சிக் நீதிமன்றம், எந்த ஒரு கால தாமதமும் இந்தத் தடை உத்தரவுக்கு இருக்க கூடாது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. ஐரோப்பிய கமிஷனும் இந்தத் தீர்ப்பு குறித்து விவரங்களை கேட்டுள்ளது. அப்படி கேட்பதனால் வோல்க்ஸ்வாகன் மற்றும் அதன் துணை நிறுவனங்களிடம் பிரச்னையை சரி செய்ய ஐரோப்பிய கமிஷன் அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களில் பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கவும் ஜெர்மனி அரசு ஆலோசித்து வருகிறது. ஜெர்மனியின் உச்ச நீதிமன்றத்தில், இந்த வாரம் ஒரு வழக்கு விசாரணைக்கு வரப் போகிறது. ஸ்டுட்கார்ட் மற்றும் டியூசெல்டார்ஃப் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் கெட்டுப் போனதால், டீசல் கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தடை உத்தரவை மேற்கொண்ட கீழ் நீதிமன்றங்களுக்கு எதிராக ஜெர்மனி அரசு தொடர்ந்துள்ள வழக்குதான் இவ்வாரம் விசாரணைக் வர உள்ளது.

வாகனத் தயாரிப்பில் உலகின் முன்னோடியாகத் திகழும் ஜெர்மனி கார் உற்பத்தியாளர்களுக்கும், ஆட்டோ துறைக்கும் இந்த உத்தரவு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது. ஜெர்மனியின் சான்செலாராக உள்ள ஏஞ்சலா மெர்க்கலுக்கும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் பலத்த அவமானமாகவே பார்க்கப்படுகின்றது. காரணம். அவர் வாகன உற்பத்தித் துறையுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளது தான்.  

`இந்த நீதிமன்ற உத்தரவு ஜெர்மனி அரசுக்கு மிகப் பெரிய அடிதான். வாகன உற்பத்தித் துறையில் இருந்து அவர்களுக்கு வரும் பணத்துக்காக இப்படி உத்தரவுக்கு எதிராக செயல்படுகின்றனர். அதே நேரத்தில், டீசல் கார்களை வைத்திருக்கும் 1 கோடி பேரை கைவிட்டுள்ளது அரசு’ என்று கூறுகிறார் டி.யூ.ஹெச் சுற்றுச்சூழல் அமைப்பின் மேலாளர் யூர்ஜென் ரேஷ்.

0 Comments

நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்தினால், பெரும்பான்மையான டீசல் கார்களுக்கு சிக்கல் ஏற்படும். யூரோ-6 ஸ்டாண்டர்டுடன் வந்த கார்கள் மட்டுமே இந்தத் தடை உத்தரவில் இருந்து தப்பிக்கும். ஜெர்மனியில் மொத்தம் 1.5 கோடி டீசல் கார்கள் இருக்கின்றன. இதில் 27 லட்சம் கார்களில் மட்டுமே யூரோ-6 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த தொழில்நுட்பம் 2014 ஆம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

1 Comment(s)
Thanks for the comments.