Arjuna Award : மோட்டர்சைக்கிள் வீரர் கவுரவிற்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது...!

20 ஆண்டுகளாக மோட்டர்ஸ்போர்ட்டில் பங்கேற்று வந்துள்ள கவுரவ் கில் 1999 யில் தேசிய மோட்டர்கிராஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார்

View Photos

1961 முதல் வழங்கப்பட்டு வரும் அர்ஜூனா விருதுகள், இந்தியாவில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். 2019 அர்ஜூனா விருதுகளை வென்றவர்களில் ஒருவர் மோட்டர்சைக்கிள் வீரரான கவுரவ் கில் இது இந்தியா மோட்டர்ஸ்போர்ட் வரலாற்றில் ஓர் மைல்கல்லாக கருதப்படுகிறது.

இந்தியாவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள கவுரவ் கில், ஆசிய பசிபிக் சாம்பியன்ஷிப்பை (APRC) 3 முறை வென்றுள்ளார். 2013, 2016, 2017 யில் APRC யை வென்றுள்ளார் கில். மேலும் INRC யை ஆறு முறை வென்றுள்ளார் கில். 2019 INRC யில் மகிந்திரா அட்வென்சர் அணிக்காக பங்கேற்றுள்ளார் கவுரவ் கில்.

6e964qu4

INRC 2019 யில் பங்கேற்ற கவுரவ் கில்

2015 யில் தான் மோட்டர்சைக்கிள் பந்தயத்தை ஓர் விளையாட்டாக கருதியது ஸ்போர்ட்ஸ் துறை. தேசிய விளையாட்டு பெடரேசனில் FMSCI இணைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக அர்ஜூனா விருதுக்கு கில்லின் பெயரை பரிந்துரை செய்து வந்தது FMSCI.

0 Comments

20 ஆண்டுகளாக மோட்டர்ஸ்போர்ட்டில் பங்கேற்று வந்துள்ள கவுரவ் கில் 1999 யில் தேசிய மோட்டர்கிராஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். அதன் பின் 2000 யில் ரெய்ட் –டி- ஹிமாலையாவில் பங்கேற்றார். 2003 யில் தேசிய ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப்பில் 2வது இடத்தில் வந்தார் கவுரவ் கில். MRF அணியுடன் பங்கேற்று தேசிய ராளி சாம்பியன்ஷிப்பை 2007 யில் வென்றார் கில்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.