உலகின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஃபோர்ட் கார் நிறுவனம். இந்த நிறுவனம், ரஷ்யாவில் ஃபோர்ட் சோலேர்ஸ் என செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து ஃபோர்ட் நிறுவனம் விலகவுள்ளதாக அந்த நிறுவனம், கடந்த புதனன்று அறிவித்தது. ஃபோர்ட் நிறுவனம் விலகுவது மூலம், ரஷ்யாவில் சோலேர்ஸ் நிறுவனம் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள இருக்கிறது. லாபம் கிடைக்காத இடங்களில் ஆலைகளை ஃபோர்ட் மூடவுள்ளதாக ராய்டர்ஸ்க்கு தகவல்கள் கிடைத்தது.
தற்போது, ரஷ்யாவில் ஃபோர்ட் சோலேர்ஸ் நிறுவனம் பாசஞ்சர் வாகனங்களை தயாரித்து வருகிறது. இனி, சோலேர்ஸ் நிறுவனம் கமர்ஷியல் வாகங்களை தயாரிக்கவுள்ளது. பாசஞ்சர் வாகன தயாரிப்பு ஜூன் மாதத்துடன் முடிவிற்கு வருகிறது.
ரஷ்யாவில் ஃபோர்ட் நிறுவனம் அசம்பளி ப்ளாண்ட்டை மூடவுள்ளது
ஃபோர்ட் ஐரோப்பியாவின் தலைவரான ஸ்டிவன் ஆம்ஸ்ட்ராங் கூறும்போது, ‘புது ஃபோர்ட் சோலேர்ஸ் திட்டம், கமர்ஷியல் வாகனங்களை தயாரிப்பதில் ஃபோர்ட்டின் புது ரீடிசைன் கீழ் வரும். இதன் மூலம் லாபம் தரக்கூடிய ஐரோப்பிய சந்தைகளில் கவனம் செலுத்தவுள்ளோம்' என்றார்.
ரஷ்யாவில் அசம்ப்ளி லைன் அறிமுகம் செய்த முதல் சர்வதேச கார் நிறுவனம், ஃபோர்ட் ஆகும். செயிண்ட்.பீட்டர்ஸ்பேர்க்கில் 2002 ஆம் ஆண்டு அசம்ப்ளி லைனை ஃபோர்ட் அறிமுகம் செய்தது. 2011 ஆம் ஆண்டு 50 – 50 என பங்கீட்டில் சோலேர்ஸ் நிறுவனம் உடன் இணைந்து ஃபோர்ட் சோலேர்ஸ் அறிமுகம் ஆனது. ஆனால் அதன் பின் அதிக பங்குகள் பெற்று ஃபோர்ட் நிறுவனமே வர்த்தகத்தை பார்த்துக் கொண்டது.
இந்த ஆண்டு ரஷ்யாவில் வாகங்களின் விற்பனை 3.6 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ‘ரஷ்யாவில் பாசஞ்சர் கார் மார்கெட் எதிர்பார்ப்பை விட குறைவாகவே இருந்தது' என ஃபோர்ட் தெரிவித்தது. இதன் மூலம் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.