சீட் பெல்ட்டில் தீப்பொறி : 20 லட்சம் கார்களை திரும்ப பெறுகிறது ஃபோர்டு

அமெரிக்காவில் 16 லட்சம், கனடாவில் 3.4 லட்சம், மெக்சிகோவில் 37 ஆயிரம் கார்கள்.

View Photos

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனமாக ஃபோர்டு இருந்து வருகிறது. எப். 150 என்ற பெயரில் டிரக் வடிவிலான கார்கள் ஃபோர்டு நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.

இதனுடைய சீட் பெல்ட்டுகளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும், இதனால் தீப்பொறி ஏற்பட்டு சிறிய அளவில் தீ விபத்து ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. அந்த வகையில் அமெரிக்காவில் 17 பெரும், கனடாவில் 6 பேரும் புகார் அளித்துள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்து நேரும்போது பிரிடென்ஷனர் என்ற கருவி துரிதமாக செயல்பட்டு சீட் பெல்ட்டை லாக் செய்யும். இந்த கருவி அளவுக்கு மிஞ்சிய தீப்பொறியை வெளியிட்டு சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அமெரிக்காவில் 16 லட்சம், கனடாவில் 3.4 லட்சம், மெக்சிகோவில் 37 ஆயிரம் என மொத்தம் 20 லட்சம் கார்களை ஃபோர்டு திரும்ப பெறவுள்ளது. இந்த கார்கள் இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படவுள்ளன. இதற்கு சுமார் 140 மில்லியன் (ரூ. 1004 கோடி) அளவுக்கு செலவாகும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.

சீட் பெல்ட் பிரச்சனையால் தீ விபத்து ஏற்பட்டதாக கடந்த மாதம் புகார்கள் எழுந்தன. இதன் பின்னர் அமெரிக்க போக்குவரத்து துறை முதல்கட்ட விசாரணையில் இறங்கியது. இந்த நிலையில்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது ஃபோர்டு.

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.