சீனாவில் கார் உற்பத்தி செய்யும் முடிவில் மாற்றம் இல்லை – ட்ரம்புக்கு ஃபோர்டு பதிலடி

ட்ரம்பின் ட்விட்டர் பதிவால் அமெரிக்காவில் சிறிய கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதா ஃபோர்டு?

ட்ரம்புடன் மோதல் போக்கில் ஈடுபடும் ஃபோர்டு

நியூயார்க்: பிரபல மஸ்டாங் ரக கார்களை தவிர்த்து அமெரிக்காவில் செயல்பட்டுவரும் தனது அனைத்து கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை மூடப்போவதாக ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்கு தி ஃப்யூசன், ஃபியெஸ்டா மற்றும் பெரிய ரக டாரஸ் செடான் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக கிராஸ்ஓவர் மற்றும் எஸ்.யு.வி. ரக கார்கள் சந்தைக்கு வரும் என்று அர்த்தம். இளம் தலைமுறையை குறிவைத்து புதிய ரக கார்களை மெக்சிகோவில் தயாரிப்பதற்கு ஃபோர்டு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொருளாதார காரணங்களுக்காக சீனாவில் இருந்து தயாரிக்க ஃபோர்டு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில்தான், சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் அனைத்திற்கும் 25 சதவீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.

ஃபோர்டு ஃபோகஸ் ஆக்டிவ்

சமீபத்தில் ட்விட்டரில் எழுதிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வரி விதிப்பு காரணமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக கார்களை அமெரிக்காவில் சந்தைப்படுத்தும் முடிவை ஃபோர்டு கைவிட்டுள்ளது. இது ஆரம்பம் மட்டுமே. இந்த காரை அமெரிக்காவிலேயே தயாரிக்க முடியும். அப்போது வரி ஏதும் ஃபோர்டு கட்டத் தேவையில்லை என்றார்.

இதனை பொருட்படுத்தாத ஃபோர்டு நிறுவனம் ட்ரம்ப் சொல்வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அமெரிக்காவில் கார் உற்பத்தி செய்யும் திட்டம் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளது.

ட்ரம்பின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி தொடர்பு மேலாளர் மைக் லெவின், “ அமெரிக்காவில் நாங்கள் காரை உற்பத்தி செய்தால் ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை மட்டுமே விற்க முடியும். மேலும் இது எங்களுக்கு கடுமையான சவால்களை அளிக்கும். மற்ற கார் நிறுவனங்களை விட அமெரிக்கர்களை நாங்கள் அதிக எண்ணிக்கையில் பணிக்கு அமர்த்தினோம் என்பதில் பெருமை கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

நடப்பாண்டின் தொடக்கத்தில் மஸ்டங் மற்றும் குறிப்பிட்ட சில கார்களை தவிர்த்து மற்ற கார்களின் உற்பத்தியை ஃபோர்டு குறைத்துக் கொண்டது. சீனாவில் காரை உற்பத்தி செய்ய முடியாவிட்டாலும் மற்ற நாடுகளில் ஃபோர்டு நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு அதனால் சிறிய ரக கார்களை தயாரிக்க முடியும்.

ஃபோர்டு ஃபோகஸ் ஆக்டிவ்

ஜூலை மாதத்தில் இருந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் வரை அமெரிக்க வரி விதிக்கிறது. இதேபோன்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற பொருட்களுக்கும் அதிக வரியை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News
2018 மெர்சிடஸ் பென்ஸ் சி க்ளாஸ் ஃபேஸ்லிப்ட்: பிரத்யேக தகவல்கள்
முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் மஹிந்திரா KUV100 Electric கார்
விரைவில் அறிமுகமாகிறது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஹைபர் கார்!
அசத்தலான டுகாட்டி ஸ்க்ராம்ளர் - முழு விவரம்
2.4 லட்சம் கார்களில் கோளாறு..!?- நிசான் நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
2018 மெர்சிடிஸ் பென்ஸ் - C-Class Facelift இந்தியாவில் அறிமுகம் - ஆரம்ப விலை ரூ. 40 லட்சம்
ஃபெராரியின் புதிய கார் “புரோசங்’’ 2022-ல் அறிமுகம்
2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வரும் அதிரடி ஆடி கார்!
அட்டகாசமான மெர்சிடீஸ் - AMG G63 அடுத்தமாதம் இந்தியாவில் அறிமுகம்
மகாராஷ்டிராவில் ரூ. 91-ஐ தாண்டியது பெட்ரோல் விலை
பி.எம். டபிள்யூ. கார்களின் ஏ.சி.-யில் கோளாறு