New Cars and Bikes in India

ஃபோர்ட் நிறுவனத்தின் சி.என்.ஜி கார் விவரங்கள்

இந்த ஆஸ்பயர் சி.என்.ஜி க்கு இரண்டு வருடம் அல்லது 1,00,000 கிலோமீட்டர் வாரண்டி அளிக்கிறது ஃபோர்ட்

View Photos
1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் தான் புது சி.என்.ஜி பொருத்தப்பட்டுள்ளது.

Highlights

  • ஃபோர்ட் நிறுவனத்தின் ஆஸ்பயர் கார் இப்போது, சி.என்.ஜி வகையில் கிடைக்கிறது
  • 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் தான் புது சி.என்.ஜி பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த கார்களின் விலை 6.27 இலட்சம் மற்றும் 7.12 இலட்சமாகும்.

ஃபோர்ட் நிறுவனத்தின் ஆஸ்பயர் கார் இப்போது, சி.என்.ஜி வகையில் கிடைக்கிறது. ஆம்பியண்ட் மற்றும் ட்ரெண்ட் ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கார்களின் விலை முறையே 6.27 இலட்சம் மற்றும் 7.12 இலட்சமாகும்.

95 bhp பவர் மற்றும் 120 Nm உட்ச டார்க் வெளியிடும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் தான் புது சி.என்.ஜி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புது சி.என்.ஜி குறித்து ஃபோர்ட் இந்தியாவின் வினய் ரெய்னா கூறுகையில், ‘புது சி.என்.ஜி சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. மேலும் இதன் மூலம் அதிக பணம் சேமிக்க முடியும். இது மக்களை அதிக அளவில் கவரலாம்' என்றார்.

ஃபோர்ட் இந்தியா, இந்த ஆஸ்பயர் சி.என்.ஜி க்கு இரண்டு வருடம் அல்லது 1,00,000 கிலோ மீட்டர் வாரண்டி அளிக்கிறது.

டெக்னிக்கலாக, 7 இன்ச் தொடுதிரை, பவர் விண்டோ, இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ் வசதிகள் இந்த சி.என்.ஜி வகையில் உள்ளன.

0 Comments

மேலும் படிக்க - “ஃபோர்ட் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

Be the first one to comment
Thanks for the comments.