நிதி அமைச்சரின் ‘ஓலா, உபர்’ கருத்து- என்ன சொல்கிறார் நிதின் கட்கரி?

வாகனத் துறைக்குத் தற்போது 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது

View Photos
ஆட்டோமொபைல் துறை விற்பனை, கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

வாகனத் துறை நெருக்கடி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். 

முன்னதாக நிர்மலா சீதாராமன், “நாட்டில் வாகனத் துறை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பி.எஸ் 6 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை, வாகனங்களைப் பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை மாற்றம், மற்றும் இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு இ.எம்.ஐ கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள்' என்று தெரிவித்தது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. 

இது குறித்து பேசிய நிதின் கட்கரி, “அவரின் கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆட்டோமொபைல் துறை சரிவைக் கண்டிருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதும், பொதுப் போக்குவரத்தின் தரம் உயர்ந்துள்ளதும் அதற்கு முக்கிய காரணங்களாகும். 

ஆட்டோமொபைல் துறைக்கு ஜிஎஸ்டி மாற்றியமைப்பு குறித்து தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அது குறித்து நிதி அமைச்சகம் சீக்கிரமே முடிவெடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார். வாகனத் துறைக்குத் தற்போது 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதை 10 சதவிகிதம் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

0 Comments

ஆட்டோமொபைல் துறை விற்பனை, கடந்த 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. மொத்தமாக பார்க்கும்போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை, சென்றமாதத்துடன் ஒப்பிடும்போது 30 சதவிகிதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. 

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.