F1: ஓர் ஆண்டுக்கு பின்பு வெட்டலின் 'ஐ யம் பேக்' தருணம்

அணிகள் பிரிவில் 527 புள்ளிகளுடன் மெர்சிடிஸ் முதலிடத்திலும் 394 புள்ளிகளுடன் பெராரி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

View Photos

2000 களில் பார்முலா 1 பந்தயத்தில் முடிசூடா ராஜாவாக திகழ்ந்தது பெராரி அணி. சிறந்த அணிக்கான பட்டத்தை சீசன் சீசனாக தக்க வைத்து கொண்டது பெராரி அணி. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின் ரெட்புல், மெர்சிடிஸ் அணி மூலம் கடும் சவாலை சந்தித்தது பெராரி அணி. சீசனின் சிறந்த அணி என்ற பட்டத்தை பெராரி அணி வென்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகவுள்ளது.

em1pnl7s

செபாஸ்டின் வெட்டல் பெராரி அணியின் காரில் முதலாவதாக வந்தார்

2014 முதல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மெர்சிடிஸ் அணி தான் இந்த பட்டத்தை பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் லூயிஸ் ஹாமில்டன். மெர்சிடிஸ் அணிக்காக கார் ஓட்டும் ஹாமில்டன், பார்முலா 1 பந்தயத்தின் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார்.

நேற்று பார்முலா 1 பந்தயத்தின் சிங்கப்பூர் கிராண்ட்பிரிக்ஸ் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு இடங்களில் பெராரி அணியின் வீரர்களான செபாஸ்டின் வெட்டல், சார்லஸ் லெக்லேர்க் பெற்று அசத்தினர். 22 போட்டிகளுக்கு பிறகு கிராண்ட்பிரிக்ஸை வென்றுள்ளார் வெட்டல். அவரை விட 2.641 வினாடிகள் பின் தங்கிய சார்லஸ் இரண்டாவதாக வந்தார்.

ao0n85fo

பெராரி வீரர் சார்லஸ் இரண்டாவது இடத்தை பிடித்தார்

தகுதி சுற்றின் முடிவில் சார்லஸ் முதலாவதாக வந்தார். 19வது Lap வரை எந்த வீரரும் பிட்-ஸ்டாப் செய்யவில்லை. வெர்ஸ்திராபன் தான் முதலாவதாக பிட்-ஸ்டாப் செய்தார். அவரை தொடர்ந்து முன்னிலையில் இருந்த வீரர்களும் பிட்-ஸ்டாப் செய்தனர். இங்கு தான் வெட்டல் சார்லஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறினார். சார்லஸ் தனது ஏமாற்றத்தை அணியிடம் ரேடியோவில் வெளிப்படுத்தினார். இருப்பினும் அணியின் கட்டளைகளை கடைப்பிடித்தார் சார்லஸ்.

no7hbt6k

ஹாமில்டன் நான்காவது இடத்தை தான் பிடித்தார்

மெர்சிடிஸ் அணியின் ஹாமில்டன் போட்டியை இரண்டாவதாக தொடங்கினார். ஆனால் முடிவில் 4வது இடத்தை தான் அவரால் பிடிக்க முடிந்தது. வெட்டல், சார்லஸை தொடர்ந்து மூன்றாவது இடத்தை தனக்குரியதாக்கினார் வெர்ஸ்திராபன்.

8b82slhc

செர்சியோ மெக்கானிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டார்

0 Comments

நான்காவது இடத்தை ஹாமில்டனும் ஐந்தாவது இடத்தை போட்டாஸும் பெற்றனர். இந்த போட்டியில் 3 முறை Safety Car அனுமதிக்கப்பட்டது. இந்த கிராண்ட்பிரிக்ஸ் முடிவில் 296 புள்ளிகளுடன் ஹாமில்டன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து 231 புள்ளிகளுடன் போட்டாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 200 புள்ளிகளுடன் சார்லஸ் மற்றும் வெர்ஸ்டாபின் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அணிகள் பிரிவில் 527 புள்ளிகளுடன் மெர்சிடிஸ் முதலிடத்திலும் 394 புள்ளிகளுடன் பெராரி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.