லம்போர்கினியின் Urus SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

இதன் உச்சபட்ச வேகம் 305 கிலோ மீட்டர். உலகத்திலேயே மிக வேகமான SUV கார் இது என்று கருதப்படுகிறது.

View Photos
தி லம்போர்கினி Urus உலகின் மிக வேகமான SUV கார் என்று கருதப்படுகிறது. இதன் வேகம் 305 Kmph.

லம்போர்கினியின் Urus SUV கார் கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நாள் முதல் இந்தியாவில் எப்போது லம்போர்கினி மாடல் அறிமுகம் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 3 கோடிக்கு கார் விற்பனையானாலும், அதனை வாங்குவதற்கு இந்தியாவில் ஆட்கள் உள்ளனர். Urus மாடலில் புதிதாக இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பிராண்டில் புதிய கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று லம்போர்கினி நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி வரும் கார்களை வாங்குவதற்கு நீங்கள் இப்போது விரும்புகீறர்கள் என்றால் இப்போதே புக் செய்து அடுத்த ஆண்டுவரை காருக்காக காத்திருக்க வேண்டும்.

ga7hu7f

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி காருடன் இந்திய பிரிவின் தலைவர் சரத் அகர்வால்

0 Comments

ஸ்போர்ட்டிங் மாடல் முன்புற அமைப்புடன் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் இதில் உள்ளது. எஞ்சினின் உற்பத்தி சக்தி 641 பி.எச்.பி. திறனைக் கொண்டது. வேகத்தை பொருத்தவரையில், 0-100 கிலோ மீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும். 200 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிப்பிடிக்க இதற்கு தேவைப்படும் நேரம் 12.8 வினாடிகள். இதன் உச்சபட்ச வேகம் 305 கிலோ மீட்டர். உலகத்திலேயே மிக வேகமான SUV கார் இது என்று கருதப்படுகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.