எக்ஸ்க்ளூசிவ்: இந்தியாவில் வெளியாகும் 2018 சுசுகி வி-ஸ்டோர்ம் 650

இவ்வாண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில், சுசுகி வி-ஸ்டோர்ம் 650 இரு சக்கர வாகனம் இந்தியாவில் வெளியாக உள்ளது

View Photos

இவ்வாண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில், சுசுகி வி-ஸ்டோர்ம் 650 இரு சக்கர வாகனம் இந்தியாவில் வெளியாக உள்ளது என்று சுசுகி இந்தியா அறிவித்துள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக இது அறிமுகம் செய்யப்பட்டது. கவாசக்கி வெர்சீஸ் 650க்கு போட்டியக சுசுகி வி-ஸ்டோர்ம் 650 வெளியாக உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சுசுகி வி-ஸ்டோர்ம் 650-யின் எக்ஸ்-ஷோரூம் விலை 6.5 லட்சம் ரூபாய் என கணிக்கப்படுகிறது. 645 சிசி, லிக்விட் கூல்டு, 4 ஸ்ட்ரோக், 90 டிகிரி, வி-ட்வின் இன்ஜின் கொண்டுள்ளது.  வி-ஸ்டோர்ம் 650 வாகனத்தின் இன்ஜின் சக்தி 70bhp, 8,800rpm மற்றும் 66Nm பீக் டார்க் கொண்டுள்ளது.  சர்வதேச சந்தையில், வி-ஸ்டோர்ம் 650, வி-ஸ்டோர்ம் 650 XT என இரு வகைகளில் உள்ளது.

பைக்

0 Comments

வி-ஸ்டோர்ம் 650 வாகனம் பிரிட்ஜெஸ்டோன் பாட்டில்விங் அலுமினியம் டையர்களைக் கொண்டுள்ளது. வி-ஸ்டோர்ம் 650 XT வாகனம், அலுமினியம் ரிம்ஸ் கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வையர் ஸ்போக்ஸைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் இது வெளியாகிறது.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Suzuki Hayabusa with Immediate Rivals