இரண்டு நிமிடத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழந்த எலான் மஸ்க்..!

கடந்த மூன்று மாதங்களில் 63,000 கார்களை மட்டுமே டெஸ்லா விற்றது.

View Photos
பங்குகளின் மதிப்பு குறைந்ததே இதற்கு காரணம்

தனக்கென ஒரு சம்ராஜ்யம் அமைத்து ஆள்பவர் எலான் மஸ்க். டெஸ்லா மூலம் எலக்ட்ரிக் கார் உலகில் ஒரு மாபெரும் புரட்சியை எலான் மஸ்க் நிகழ்த்தினார் என்றால் அது மிகையாகாது.

ஆனால் இன்று காலை எலான் மஸ்க் 1.1 பில்லியன் டாலர் மதிப்பை இழந்தார். அதுவும் வெறும் இரண்டே நிமிடங்களில். இது இந்தியா மதிப்பில் சுமார் 7.7 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். டெஸ்லாவின் பங்குகள் 11 சதவிகிதம் குறைந்ததே இதற்கு காரணம்.

இன்று காலை 9.32 நிலவரபடி எலான் மஸ்க்கின் மதிப்பு 22.3 பில்லியன் டாலராக புலும்பேர்க் பில்லினியர் பட்டியலில் பதிவாகியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் 63,000 கார்களை மட்டுமே டெஸ்லா விற்றது. சென்ற ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 90,966 கார்களை டெஸ்லா விற்றது குறிப்பிடத்தக்கது.

மஸ்கின் வருமானத்தில் 10 பில்லியன் டாலர் டெஸ்லாவில் இருந்தும் 13 பில்லியன் டாலர் ஸ்பேஸ் எக்ஸ் –யில் இருந்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.