பொருளாதார மந்த நிலை: டொயோட்டோ, ஹூண்டாய் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தின!!

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, தென் கொரியாவின் ஹூண்டாய் ஆகியவை சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

View Photos
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

Highlights

  • ஆட்டோ மொபைல் துறையில் 3.5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்
  • உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் தேங்கி நிற்கின்றன
  • கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்த நிலை காணப்படுகிறது

பொருளாதார மந்த நிலை நீடிக்கும் நிலையில் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்களது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. அங்கு பணியாற்றுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றன. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன. 

இந்திய ஆட்டோ மொபைல் துறையை பொறுத்தளவில் தற்போதுவரை 3.5 லட்சம்பேர் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயணிகள் வாகனங்களின் விற்பனை சரிவை சந்தித்திருக்கிறது. 

இதனால், ஆட்டோ மொபைல் துறையில் பணியாற்றுபவர்கள் வேலை இழந்து வருகின்றனர். இந்த நிலை இன்னும் சில காலம் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரபல ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, தென் கொரிய நிறுவனம் ஹூண்டாய் ஆகியவை சில தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. 

டொயோட்டோ தனது பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளது. கார்களுக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும், விற்பனையாகாமல் 7 ஆயிரம் கார்கள் தேங்கி நிற்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது. 

பண்டிகை நாட்களில் கார்களின் விற்பனை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. 

0 Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.