டுக்காட்டியின் அடுத்த பைக் மல்ட்டிஸ்ட்ரடா 1260: விலை 18 லட்சம் ரூபாய்

இந்திய சந்தைக்குள் டுக்காட்டி மல்ட்டிஸ்ட்ரடா 1260 என்ற புதிய பைக்கை ஜூன் 19-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது

View Photos

Highlights

  • மல்ட்டிஸ்ட்ரடா மாடலில் அடுத்த பைக்கை வெளியாகிறது
  • ஜூன் 19-ம் தேதி இந்த பைக் இந்தியாவில் அறிமுகம்
  • தொலைதூர பைக் பயணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது

கரடுமுரடான பாதையில், சவாலான பைக் பயணங்கள் செய்வது, இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதை குறிவைத்து, இந்திய சந்தைக்குள் டுக்காட்டி மல்ட்டிஸ்ட்ரடா 1260 என்ற புதிய பைக்கை ஜூன் 19-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. மல்ட்டிஸ்ட்ரடா வகை பைக்குகளிலேயே, பவர்ஃபுல் வெர்ஷனாக இது வெளியாக உள்ளது. 1262 சி.சி, ட்வின் டெஸ்டாஸ்ட்ரெட்டா என்ஜினுடன் வெளியாகிறது. 158 பி.எச்.பி ஹார்ஸ் பவரும், 129.5 என்.எம் டார்க்கும் கொண்டது.

ducati multistrada 1260 engine

இந்த பைக்கின் சாசிஸ் புதிய வடிவம் பெற்றுள்ளது. ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல், வீல் கன்ட்ரோல் என எலக்ட்ரானிக் கன்ட்ரோல்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், ஸ்மார்ட்ஃபோன், புளூடூத், கார்னரிங் லேம்ப் என மல்ட்டி மீடியா சிஸ்டம் இந்த பைக்கில் உள்ளது.

Ducati Multistrada 1260

17.06 Lakh * On Road Price (New Delhi)
Ducati Multistrada 1260

ducati multistrada 1260

மல்ட்டிஸ்ட்ராடா 1260-ல் 4 வேரியன்ட்கள் வெளியிடப்படுகிறது. 1260, 1260 - எஸ், 1260 டி-ஏர், 1260 பைக் பீக் ஆகிய வெர்ஷன்கள் வெளியாக இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை 1260 மற்றும் 1260 -எஸ் ஆகிய இரண்டு வெர்ஷன்கள் மட்டுமே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1260-எஸ் மாடல், ஸ்கை ஹூக் சஸ்பென்ஷன் பெற்றிருக்கிறது.

0 Comments

இந்தியாவில் மல்ட்டிஸ்ட்ரடா 1260 மாடலின் விலை 16 லட்சம் ரூபாய்க்கு தொடங்கும். 1260-எஸ் மாடல் 18 லட்சம் ரூபாயாகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Compare Ducati Multistrada 1260 with Immediate Rivals