இந்திய சந்தையில் டுகாட்டியின் அடுத்த மாஸ் பைக்!

உலகின் முன்னணி ஸ்போர்ட் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி தனது அடுத்த பைக்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

View Photos

Highlights

  • டுகாட்டியின் மல்டிஸ்ட்ராடா 1200 இந்தியாவில் கிடைத்து வந்தது
  • தற்போது அதன் அப்டேட்டட் வெர்ஷனான 1260 ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது
  • மல்டிஸ்ட்ராடா 1200 மற்றும் 1260 வேரியன்ட்களில் இந்த பைக் கிடைக்கும்

உலகின் முன்னணி ஸ்போர்ட் பைக் தயாரிப்பாளரான டுகாட்டி தனது அடுத்த பைக்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 மற்றும் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 s ஆகிய பைக்குகளையே அந்நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளன. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260, இரு சக்கர வாகனத்தின் விலை 15.99 லட்ச ரூபாய் எனவும், டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 s, இரு சக்கர வாகனத்தின் விலை 18.06 லட்ச ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 

ducati multistrada 1260 engine

டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 s இரு சக்கர வாகனத்தில் டி.எஃப்.டி பேனல், ஸ்கைஹூக் சஸ்பென்ஷன், அதிக திறன் கொண்ட பிரேக், பிஸ்டன் காலிப்பர்ஸ் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னர் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1200 இந்திய சாலைகளில் வலம் வந்து கொண்டிருந்தன. தற்போது அதற்கு பதில் டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 இந்திய சந்தைகளில் கிடைக்கப் பெறும். இந்தப் புதிய பைக்கிற்கு திறம் மேம்பட்ட இன்ஜின், புதிய சேசிஸ், மின்னணு சாதனப் பொருட்களில் அப்டேட் என்ற பல புதிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.

ducati multistrada 1260 s tft screen

இந்த இரு சக்கர வாகனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம், நான்கு வகைகளில் இதை ஓட்ட முடியும் என்பது தான். 

ஸ்போர்டிங் மோட் எனப்படும் முதல் வகை. இந்த வகையில் பைக்கின் 158 பி.எச்.பி பவரையும் பெற முடியும். நினைத்த நேரத்தில் உச்சபட்ச வேகத்தை அடைய முடியும். 

டூரிங் மோட் எனப்படும் இரண்டாவது வகையில் 158 பி.எச்.பி சக்தியும் கிடைக்கும். ஆனால், பவர் சீரான நிலையில் வெளிப்படும்.

அர்பன் மோட் எனப்படும் மூன்றாவது வகையில் 100 பி.எச்.பி பவர் மட்டுமே கிடைக்கும். இதிலும் வேகம் ஒரு சீரான முறையில் மட்டுமே ஏறும். 

0 Comments

கடைசியாக என்டூரோ மோட். இந்த வகையிலும் 100 பி.எச்.பி சக்தி பெறலாம். இதில் இன்னும் அதிக வேக கட்டுப்பாடும், ஏபிஎஸ் மற்றும் வீல் கட்டுப்பாடும் இருக்கும்.

Ducati Multistrada 1260 Technical Specifications

  Ducati Multistrada 1260 Ducati Multistrada 1260 S
Engine 1,262 cc Testastretta DVT L-Twin 1,262 cc Testastretta DVT L-Twin
Transmission 6-speed manual 6-speed manual
Max Power 158 bhp @ 9,500 rpm 158 bhp @ 9,500 rpm
Peak Torque 129.5 Nm @ 7,500 rpm 129.5 Nm @ 7,500 rpm
Frame Tubular Steel Trellis Frame Tubular Steel Trellis Frame
Front Suspension 48 mm inverted Kayaba fork 48 mm inverted Sachs shock electronically adjustable
Rear Suspension Fully adjustable Sachs shock Fully adjustable semi-active Ducati Skyhook electronic
Front Brake 320 mm dual disc with Brembo 4-piston calipers, cornering ABS 330 mm dual discs with Brembo M50 calipers, cornering ABS
Rear Brake 265 mm single disc with 2-piston caliper, cornering ABS 265 mm single disc with 2-piston caliper, cornering ABS
Kerb Weight 232 kg 235 kg

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.