டைம்மிலர் இந்தியாவின் அசுர வளர்ச்சி!

2018 ஆண்டில் மட்டும் 7,034 ட்ரக்குகளை ஏற்றுமதி செய்தது டைம்லர். இது கடந்த ஆண்டை விட 8 சதவிகிதம் உயர்வாகும்.

View Photos
டைமில்ரின் புதிய தலைவர் ஆர்யாவுடன் ப்லோரியன் மற்றும் செபஸ்டின்

Highlights

  • 2018 ஆண்டில் மட்டும் 7,034 ட்ரக்குகளை ஏற்றுமதி செய்தது டைம்லர்
  • 2018 ஆம் ஆண்டில், 35 சதவிகிதம் வளர்ச்சியை டைம்லர் கண்டுள்ளது.
  • இந்த ஆண்டு புது தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் டைம்லர்

இந்தியாவில் ஆறு வருடங்களுக்கு முன் பாரத் பென்ஸ் ட்ரக்குகளை அறிமுகம் செய்தது டைம்லர் இந்தியா கமர்ஷியல் வாகனப் பிரிவு.

டைம்லர் நிறுவனம், இந்த ஆண்டிற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில், அதன் புதிய தலைவர் சத்யாகம் ஆர்யாவை அறிமுகம் செய்து 2018 ஆண்டிற்கான செயல்பாட்டையும் விளக்கியது.

dqt0qqp8

2019 ஆம் ஆண்டில் பல புது மாடல்களை அறிமுகம் செய்யகிறது டைம்லர்

கடந்த 2018 ஆம் ஆண்டில், 35 சதவிகிதம் வளர்ச்சியை டைம்லர் கண்டிருந்தது. 2017 ஆம் ஆண்டில் 16,717 ட்ரக்குகளை  விற்ற டைம்லர், 2018 ஆம் ஆண்டில் 22,532 ட்ரக்குகளை விற்றது. கடந்த ஆண்டில் மட்டும் 50 புது விற்பனை தளங்களை டைம்லர் துவங்கியுள்ளது.

தற்போது இந்தியாவின் மாசு கட்டுப்பாடுகளான BS VI-க்கு உட்பட்டு வாகனங்களை தயாரிக்க உள்ளது டைம்லர். இது குறித்து ஆர்யா கூறுகையில், ‘அடுத்த ஆண்டுக்குள் BS VI கட்டுப்பாடுகளுக்கு இணங்க வாகனங்களைத் தயாரிப்பதே எங்களின் திட்டம். இதற்காக பல டிசைன்கள் ஆலோசிக்கப்படுகின்றன' என்றார்.

0 Comments

2018 ஆம் ஆண்டில் 1,00,000 மாடல்களை இந்தியாவில் தயாரித்துள்ளது டைம்லர். 2018 ஆண்டில் மட்டும் 7,034 ட்ரக்குகளை ஏற்றுமதி செய்தது டைம்லர். இது கடந்த ஆண்டை விட 8 சதவிகிதம் உயர்வாகும்.

வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Be the first one to comment
Thanks for the comments.