இந்தியா கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கிரிக்கெட்க்கு பின் மிகவும் பிடித்தது பைக் தான். தோனி, யுவராஜ், சச்சின் ஆகியோர் பைக் பிரியர்களாகவே இருந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஒரு புத்தம் புதிய பைக்கை வாங்கியுள்ளார்.
சென்ற ஆண்டு யுவராஜ் சிங் இந்த பைக்கை வாங்கியிருந்தார்
BMW G 310 டிவின் என்னும் அந்த பைக்கின் விலை 3.49 இலட்சமாகும். யுவராஜ் சிங் சென்ற ஆண்டு BMW G 310 R பைக்கை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில் பல பைக்குகளின் விளம்பரங்களில் சவுரவ் கங்குலியை காண முடியும். ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகள் விளம்பரத்தில் சவுரவ் கங்குலி நடித்திருப்பார்.
BMW G 310 டிவின் பைக்கானது TVS நிறுவனத்துடன் இணைந்து ஹோசூரில் தயாரிக்கப்பட்டது. இந்த பைக்கின் 313 சிசி சிங்கிள் சிலிண்டரானது 34 BHP மற்றும் 28 Nm பவரை வெளியிடுகிறது. இது 6 கியர் வசதி பெற்றுள்ளது.

இந்த பைக்கில் 313 சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் உள்ளது
இந்த பைக்கானது 19 இன்ச் முன் சக்கரமும் 17 இன்ச் பின் சக்கரமும் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 143 Kmph வேகத்தில் செல்லும்.
வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய செய்திகளைப் பெற CarAndBikeஐ பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.